திமுக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... நெடுஞ்சாலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு..!

Published : Feb 03, 2021, 12:27 PM IST
திமுக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... நெடுஞ்சாலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு..!

சுருக்கம்

திமுக பிரமுகர் நெடுஞ்சாலையில் வைத்து மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக பிரமுகர் நெடுஞ்சாலையில் வைத்து மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்துள்ள மேல்மணம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன்(45). இவர், திமுகவின் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார். இவர், நேற்று மாலை பூந்தமல்லி - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் வெள்ளவேடு எனும் இடத்தில் இருக்கும் ஒரு பாலம் அருகே நின்றுகொண்டிருந்தார்.

அப்போது, அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், பட்டா கத்தியால் கருணாகரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் நிலைகுலைந்த கருணாகரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், மர்ம கும்பல் அந்த இடத்தைவிட்டு தப்பியோடியுள்ளது. இந்த கொலை தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கருணாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கருணாகரன் கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கிராம பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!