அடிக்கடி தனிமையில் விட்டு வெளியூர் போன கணவன்... இளைஞனை வீட்டுக்கே வரவழைத்து மனைவி உல்லாசம்.

Published : Jul 19, 2022, 07:32 PM ISTUpdated : Jul 19, 2022, 07:43 PM IST
 அடிக்கடி தனிமையில் விட்டு வெளியூர் போன கணவன்... இளைஞனை வீட்டுக்கே வரவழைத்து மனைவி உல்லாசம்.

சுருக்கம்

கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த மனைவி அதற்கு தடையாக இருந்த கணவனை கள்ளக் காதலனை வைத்து அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த மனைவி அதற்கு தடையாக இருந்த கணவனை கள்ளக் காதலனை வைத்து அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தெலங்கானா மாநிலம்  சங்கரெட்டி மாவட்டத்தில் நடந்துள்ளது.விவரம் பின்வருமாறு:-  

தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம், சங்கர் பள்ளிக்குட்பட்ட பிரங்குடாவைச்  சேர்ந்தவர் யாசோதா, இவருக்கும் கமரெட்டி மாவட்டம் மத்னூரைச் சேர்ந்த எருகல சங்கரய்யா என்பவருக்கும் இடையே கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் ஆனது முதல் தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இருவரும் பழ வியாபாரம் செய்து பிராங்குடாவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கரையா ரங்காரெட்டி மாவட்டம் சங்கர் பள்ளி மண்டலத்திலுள்ள தங்கத்துர் கிராமத்தின் எல்லையில் ஒரு ஏக்கர் மாதுளை தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அங்கே தங்கி வந்தார்.

இதில் வாரம் ஒருமுறை மனைவியை வந்து சந்தித்து விட்டு செல்வார், இந்நிலையில் கணவர் தோட்ட வேலைக்காக வெளியூர் சென்றிருந்த நிலையில் பீரங்குடாவில் செயல்பட்டுவந்த ஜிம்மில் பயிற்சியாளராக இருந்த திருப்பதி ராவ் என்பவருடன் யசோதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர், அது சில நாட்களில் கள்ளக் காதலாக மாறியது, இந்நிலையில் திருப்பதி ராவை வீட்டிக்கே வரவழைத்து யசோதா உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தார். இதனால் கணவர் சங்கரய்யா மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்ணுடன் 'லிவிங் டு கெதர்' . இஸ்டத்துக்கு உல்லாசம்.. கழுத்தை நெறித்து கொலை.

கணவரை தீர்த்து கட்டிவிட்டு திருப்பதி ராவுடன் சுதந்திரமாக வாழலாம் என அவர் முடிவு செய்தார், எனவே கணவர் சங்கரய்யாவை தீர்த்துக் கட்டுமாறு திருப்பதி ராவிடம் யசோதா கூறினார். பின்னர் காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல திட்டமிட்டார், இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி சங்கரய்யா ரங்காரெட்டி மாவட்டம் தங்கத்தூரிலுள்ள மாதுளை தோட்டத்திற்கு செல்லவிருந்த நிலையில் அதுகுறித்து யசோதா காதலனிடம் கூறினார். பின்னர் இருசக்கர வாகனத்தில் திருப்பதி ராவ் சங்கரய்யாவை பின்தொடர்ந்து சென்றார்.

இதையும் படியுங்கள்: அடத்தூ.. பக்கத்து வீட்டு பெண்ணை கூட்டி வந்து கணவனுக்கு விருந்து வைத்த மனைவி.. உடலுறவை வீடியோ எடுத்து கொடூரம்.

சங்கரய்யா தோட்டத்திற்குள் நுழைந்ததும் திருப்பதி ராவ் சங்கரய்யாவை தடியால் தலையில் பலமாக தாக்கினார். கொலை செய்தார் சங்கரய்யாவின் கழுத்தை அறுத்து வீசினார். பின்னர் அங்கிருந்து திருப்பதி ராவ் தலைமறைவானார்.இது குறித்து கணவன் வீட்டிற்கு வரவில்லை என மனைவி புகார் கொடுக்கபோலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், சங்கரய்யாவிட் பிரேதம் கிடைத்தது. பின்னர் மனைவியில் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் யசோதாவை பிடித்து விசாரித்ததில் கள்ளக் காதலனுடன் உல்லாசமாக வாழ கணவனை தீர்த்துக் கட்டியதை ஒப்புக் கொண்டார். பின்னர் விஜயநகரில் பதுங்கியிருந்த காதலன் திருப்பதி ராவை போலீசார் கைது செய்தனர். 

 

PREV
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!