என் மகளை கொன்றவர்களை உயிரோடு எரித்து கொல்லுங்கள்..!! பிரியங்காவின் தாய் ஆவேசம்..!!

Published : Nov 30, 2019, 02:42 PM ISTUpdated : Nov 30, 2019, 03:56 PM IST
என் மகளை கொன்றவர்களை உயிரோடு எரித்து கொல்லுங்கள்..!!  பிரியங்காவின் தாய் ஆவேசம்..!!

சுருக்கம்

 தன் மகளை கொடூரமாக கொன்றவர்களை எல்லோர் முன்னிலையிலும் நிறுத்தி  எரித்துக் கொல்ல வேண்டும் என்றார். 

என் மகளை துடிக்கத்துடிக்க பாலியல் வன்கொடுமை செய்து கொண்டவர்களை உயிருடன் எரித்துக் கொல்ல வேண்டுமென  கால்நடை மருத்துவர் பிரியங்காவின் தாய் ஆவேசமாக கூறியுள்ளார் .  ஐதராபாத்தில் உள்ள ஷம்சபாத்தில் உள்ள நட்சத்திரா நகரைச் சேர்ந்தவர் பிரியங்கா கால்நடை மருத்துவரான இவர் தினமும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் புறப்பட்டு மருத்துவமனைக்கு சென்று பணியாற்றி வந்தார்.  

கடந்த 27ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பியபோது பாதி வழியில் அவரது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனது.  இந்நிலையில் அருகிலிருந்த சின்கா பள்ளி சுங்கச்சாவடிக்கு  வந்திருக்கிறார் பிரியங்கா,  அங்கு அவரை பின்தொடர்ந்த  லாரி ஓட்டுனர்கள் நான்குபேர் அவரை புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.  பின் பிரியங்காவின் உடலை தார்ப்பாயால் சுற்றி கட்டபள்ளி என்ற இடத்துக்கு கொண்டு வந்து அங்குள்ள பாலத்திற்கு அடியில் வைத்து எரித்து விட்டனர் .  பின்னர் சுங்கசாவடி மற்றும் பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சி அடிப்படையில் குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இந்நிலையில் தன் மகள் மரணம் குறத்து பேசியுள்ள பிரியங்காவின் தாய் , தன் மகளை கொடூரமாக கொன்றவர்களை எல்லோர் முன்னிலையிலும் நிறுத்தி  எரித்துக் கொல்ல வேண்டும் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர் ,  என் மகள் மாயமான அன்று இரவு அதிகாலை நான்கு மணிவரை தேடியும் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை ,  மகளை தேடுவதில் போலீசார் மிகவும் மெத்தனமாக நடந்து கொண்டனர் .  என் மகள் அப்பாவி சார், அஙளுக்கா இந்த நிலைமை என கண்ணீர் விட்டு அழுதார். என்  மகளைக் கொன்றவர்களை எல்லோரது  கண் எதிரியிடம் உயிரோடு கொளுத்தனும் என்று கதறினார்.  இந்தப் போலீஸ் ஸ்டேஷன் அந்த போலீஸ் ஸ்டேஷன் என்று  அலைகழித்ததில்  3 மணி நேரம் வீணானது.  இது போன்ற நேரங்களில் நேரத்தை வீணாக்காமல் போலீசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என அவரது சகோதரி கண்ணீர் வடித்தார்.  இந்த விவகாரத்தில் போலீசார் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!