பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்ட ரோஜா..!! சமூகவலைதளத்தை அதிரவைக்கும் காஞ்சிபுரம் சம்பவம்..!!

Published : Nov 30, 2019, 11:36 AM IST
பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்ட ரோஜா..!!  சமூகவலைதளத்தை அதிரவைக்கும் காஞ்சிபுரம் சம்பவம்..!!

சுருக்கம்

ரோஜாவை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கியதுடன் அவரைக் கொலை செய்த காதலன் ராஜேஷை போலீசார் கைது செய்து பின் சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் இளம்பெண் ரோஜா சித்திரவதை செய்து காதலனால் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் , ரோஜாவுக்கு நீதி வேண்டும் என்ற ஹாஸ்டாக் ட்விட்டரில்  ட்ரெண்ட் செய்யப்பட்டுவருகிறது.  காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த ஆண்டி சிறுவள்ளூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரோஜா,  இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள  தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார்.  இவருடன் பணியாற்றி வந்த காரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் ரோஜாவுக்கு காதல் ஏற்பட்டது. 

இதனையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து  காதல் வளர்த்தனர்.  அதே நேரத்தில்   ரோஜாவை தனது இரு சக்கர வாகனத்தில்  பல இடங்களுக்கு அழைத்துச் சென்று   ரோஜாவுடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் ராஜேஷ்.  இதில் ரோஜா கர்ப்பமானார்.  இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரோஜா  ராஜேஷை வற்புறுத்தியதாக தெரிகிறது,  இந்நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் கிராமத்தில் உள்ள ஒரு அடந்த தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில்  சடலமாக கிடந்தார் ரோஜா.   இதைக்கண்ட அப்பகுதிமக்கள்  காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . 

அதில் ரோஜாவின் உடலில்  சிகரெட்டால் சூடு  வைக்கப்பட்டு அவர் துடிக்கத் துடிக்க சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.  இந்நிலையில் கொலைக்கு  காரணமான காதலன்  ராஜேஷ் கைது செய்ய வேண்டுமென ரோஜாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரேத பரிசோதனை அடிப்படையில் ரோஜாவின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார்.  ரோஜாவை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கியதுடன் அவரைக் கொலை செய்த காதலன் ராஜேஷை போலீசார் கைது செய்து பின் சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர். #JusticeForRoja என்ற ஹேஷ்டேக் மூலம் நீதிகேட்டு பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி