கொலையில் முடிந்த ரூபாய் 125 கடன்..! பீர் பாட்டிலை உடைத்து நண்பரை கொடூரமாக குத்திக்கொன்ற தொழிலாளி..!

Published : Nov 30, 2019, 11:13 AM ISTUpdated : Nov 30, 2019, 11:16 AM IST
கொலையில் முடிந்த ரூபாய் 125 கடன்..! பீர் பாட்டிலை உடைத்து நண்பரை கொடூரமாக குத்திக்கொன்ற தொழிலாளி..!

சுருக்கம்

அப்போது ராபர்ட்டும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. சிவகுமாரை அவர் தகாத வார்த்தைகளில் திட்டியிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த சிவகுமார் கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து ராபர்ட்டின் கழுத்தில் சரமாரியாக குத்தியிருக்கிறார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ராபர்ட்(40). ஊரில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த இவர், கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். வேலை முடிந்து தொழிலாளர்களுடன் பிளாட்பாரத்தில் தங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவருடன் விழுப்புரத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார்.

நண்பர்களான இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். இதனனிடையே சிவகுமாரிடம் 250 ரூபாயை கடனாக ராபர்ட் வாங்கியுள்ளார். அதில் 125 ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார். மீதி பணத்தை கொடுக்க தாமதமாகியிருக்கிறது. அதை ராபர்ட்டிடம் தொடர்ச்சியாக சிவகுமார் கேட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த சிவகுமார் மீண்டும் பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதையும் படிங்க: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! வெளுத்து வாங்கப்போகுது கனமழை..

அப்போது ராபர்ட்டும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. சிவகுமாரை அவர் தகாத வார்த்தைகளில் திட்டியிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த சிவகுமார் கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து ராபர்ட்டின் கழுத்தில் சரமாரியாக குத்தியிருக்கிறார். பலத்த காயமடைந்த ராபர்ட் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின் சிவகுமார் தப்பி ஓடியுள்ளார். அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் ராபர்ட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சிவகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!