வண்ணாரப்பேட்டை சிறுமி கூட்டு பாலியல் வழக்கு! 8 பேருக்கு ஆயுள்; 12 பேருக்கு 20 ஆண்டு சிறை; கோர்ட் தீர்ப்பு

By vinoth kumarFirst Published Sep 27, 2022, 8:35 AM IST
Highlights

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், இன்ஸ்பெக்டர், பாஜக பிரமுகர் உள்ளிட்ட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், இன்ஸ்பெக்டர், பாஜக பிரமுகர் உள்ளிட்ட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2020ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் உறுவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி(எ) வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் இரு பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாகி விட்டனர்.

மீதமுள்ள 22 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், மாரீஸ்வரன் என்பவர் விசாரணை கால கட்டத்தின் போது இறந்து விட்டார். மீதமுள்ள 21 பேர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்து. இதையடுத்து கடந்த 15ம் தேதி வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி அறிவித்தார். தண்டனை மற்றும் அபராதம் குறித்த விபரங்களை பின்னர் அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது.

சிறுமியின் நெருங்கிய உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.17 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அனிதா (எ) கஸ்தூரி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி, காமேஷ்வர்ராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம், சிவில் சப்ளைஸ் அதிகாரி கண்ணன் ஆகிய 13 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

click me!