அழுகிய நிலையில் கல்லூரி மாணவர் உடல்... திருச்சியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

Published : Sep 26, 2022, 11:59 PM IST
அழுகிய நிலையில் கல்லூரி மாணவர் உடல்... திருச்சியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

சுருக்கம்

திருச்சி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் அவரது உடல் மூன்று நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

திருச்சி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் அவரது உடல் மூன்று நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருச்சியை சேர்ந்தவர் ஆகாஷ். 20 வயதான இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ.ஆங்கிலம் படித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்திருக்கிறார். இதனிடையே கல்லூரி விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்று பெற்றோரிடம் அவர் தெரிவித்திருக்கிறார். அதன்பேரில் அவரது பெற்றோர் ஆகாஷ்க்கு கோல்டு வின்ஸ் இந்திரா நகரில் அறை எடுத்து கொடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: தூக்கு போடுவது போல் விளையாடிய அண்ணன் - தம்பி.. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

பின்னர் ஆகாஷ் அங்கு இருந்து கல்லூரிக்கு சென்று வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக பெற்றோர் ஆகாசை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்திருக்கிறது. தொடர்ந்து அவர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அறையின் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். உடனடியாக சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும் துர்நாற்றமும் வீசி இருக்கிறது. 

இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி.. ஆஞ்சநேயர் கோவிலில் ஆபாச படம்.. பட்டதாரி இளைஞர் கைது..!

இதை அடுத்து அறையின் உரிமையாளர் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்ற போது ஆகாஷ் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு சடலமாக தொங்கி இருந்திருக்கிறார். தற்கொலை செய்து மூன்று நாட்கள் ஆகிவிட்டதால் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசி இருக்கிறது. சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!