எச்சரிக்கை:கேஸ் சிலிண்டரை முறையாக பராமரிக்கலனா இதுதான் நடக்கும். தீயில் கருகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்.

By Ezhilarasan BabuFirst Published Jul 17, 2021, 10:00 AM IST
Highlights

உடனடியாக அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு தீயில் சிக்கியவர்களை மீட்க முயன்றுள்ளனர். அதே நேரத்தில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 

சென்னை திருவல்லிக்கேணியில் தீடீரென  ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரப்பையும் அதிர்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவல்லிக்கேணி ஜாம் பஜார் பகுதியில் தேவராஜன் தெருவில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தேவராஜன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று காலை  தீ விபத்து ஏற்பட்டு, தீயில் சிக்கியவர்கள் அலறியுள்ளனர்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு தீயில் சிக்கியவர்களை மீட்க முயன்றுள்ளனர். அதே நேரத்தில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில் சிக்கிய தாய் ,தந்தை, மற்றும் மகன் என மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். உடனடியாக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஜாம்பஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தினர். தீ விபத்தில் சிக்கியவர்கள் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் அப்துல் ரஹீம் (58), அவரது மனைவி பாத்திமா(52) அவரது மகன் நஹீத்(22) என தெரியவந்துள்ளது. 

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு மூவரும் தீ விபத்தில் சிக்கி உள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார் தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

click me!