பாதி எரிந்த நிலையில் இளம்பெண் சடலம்.. பலாத்காரம் செய்து கொலை? போலீஸ் விசாரணை..!

Published : Jul 15, 2021, 05:28 PM ISTUpdated : Jul 15, 2021, 05:29 PM IST
பாதி எரிந்த நிலையில் இளம்பெண் சடலம்.. பலாத்காரம் செய்து கொலை? போலீஸ் விசாரணை..!

சுருக்கம்

திருக்கோவிலுார் அருகே காப்புக்காட்டில் பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கோவிலுார் அருகே காப்புக்காட்டில் பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த காந்தி நகர் பகுதியில் டி.அத்திப்பாக்கம் காப்புக்காடு உள்ளது. இப்பகுதியில், நேற்று மதியம் விறகு பொறுக்கச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர். அப்போது, பாதி எரிந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

உடனே இதுதொடர்பாக மணலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அந்த பகுதியில் இளம்பெண் யாராவது காணாமல் போனார்களா? பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மணலுார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் ஒரு கொலை, நேற்று 3 கொலைகள் என அடுத்தடுத்து நடந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி