இது என்னமாதிரியான வக்கிரம்..? 10 வயது சிறுமியிடம் கிழவன் செய்த சில்மிஷம்.. தட்டி தூக்கிய போலீஸ்.

Published : Jul 17, 2021, 09:43 AM IST
இது என்னமாதிரியான வக்கிரம்..? 10 வயது சிறுமியிடம் கிழவன் செய்த சில்மிஷம்.. தட்டி தூக்கிய போலீஸ்.

சுருக்கம்

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் சிறுமி மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்த போது அந்த கட்டிடத்தில் காவலாளியாக இருக்கக்கூடிய கிருஷ்ணமூர்த்தி (59) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

ஆந்திராவை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபகாலமாக சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதை தடுக்க போலீசார் சமூக அமைப்புகள் எத்தனையே முயற்சிகளை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.  குறிப்பான முதியவர்கள் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு உளவியல் காரணங்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் கடந்த 11 ஆம் தேதி அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் சிறுமி மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்த போது அந்த கட்டிடத்தில் காவலாளியாக இருக்கக்கூடிய கிருஷ்ணமூர்த்தி (59) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை கண்ட சிறுமியின் சகோதரன் உடனே கூச்சலிட்டதால் கிருஷ்ணமூர்த்தி சிறுமியை விட்டி மாடியில் இருந்து கீழே தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் போலீசார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த காவலாளி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி