திருநங்கையை கொன்றது லாரி டிரைவரா? உல்லாசமாக இருந்துவிட்டு காசு கேட்டதால் வாக்குவாதத்தில் வெறிச்செயல்...

Published : Jul 17, 2019, 06:27 PM IST
திருநங்கையை கொன்றது லாரி டிரைவரா? உல்லாசமாக இருந்துவிட்டு காசு கேட்டதால் வாக்குவாதத்தில் வெறிச்செயல்...

சுருக்கம்

பரபரப்பை ஏற்படுத்திய விழுப்புரம் திருநங்கை ஒருவரை மர்ம கொலை வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்திய விழுப்புரம் திருநங்கை ஒருவரை மர்ம கொலை வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விருத்தாசலம் கீரப்பாளையம் பகுதியை பகுதியை சேர்ந்த அன்பு என்ற திருநங்கை அபிராமி  விழுப்புரம் அருகே உள்ள திருநங்கைகள் குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்றிரவு வழக்கம் போல் அபிராமி தன்னை அலங்கரித்துக் கொண்டு விழுப்புரத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அதாவது விழுப்புரம் - செஞ்சி கூட்டுரோடு அருகே ரத்த காயங்களுடன் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.  இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற அந்த கிராம மக்கள் திருநங்கை ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார் இது சம்பந்தமாக விசாரணையை கையில் எடுத்துள்ளனர். கொலை செய்யப்பட்ட திருநங்கையின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக தாலுக்கா போலீசார், வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்யப்பட்ட திருநங்கையுடன் தங்கியிருந்த 10 திருநங்கைகளிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது பணம் பிரச்சனை காரணமாகவே இக்கொலை சம்பவம் நடந்திருக்கக்கூடும் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காரில் வந்த சில மர்மநபர்கள் அபிராமியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக போலீசாரிடம் அபிராமியுடன் இருந்த திருநங்கைகள் தெரிவித்தனர். இதனால் போலீசார் உண்மை குற்றவாளியையும், கொலைக்கான காரணத்தையும் கண்டறியும் முயற்சியில் இறங்கினர். 

வழக்கமாக இரவு நேரங்களில் லாரி டிரைவர்களுடன் பணம் கொடுக்கல், வாங்கல் காரணமாக வாக்குவாதத்தில் அபிராமி ஈடுபடுவாராம். இதில் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் ஒருவர்தான் அபிராமியை கருங்கல்லை தலையில் போட்டு கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆனதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, திருநங்கையை உல்லாசம் அனுபவித்துவிட்டு அதிகமாக பணம் கேட்டதால் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம குமபலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Babita Singh Reporting: ஒரு கொலை.. பல சந்தேகங்கள்! வீட்டுக்குள்ளேயே மறைந்திருக்கும் அதிர்ச்சி ரகசியம் – படம் எப்படி இருக்கு?
திருமணத் தடையை நீக்குவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய ஜோதிடர்..! கோவையில் பரபரப்பு