பிரபல பைனான்சியர் படுகொலை வழக்கு.. திமுக ஊராட்சி தலைவர் குண்டர் சட்டத்தில் கைது..!

By vinoth kumar  |  First Published Oct 11, 2022, 2:32 PM IST

கடந்த ஆகஸ்ட் மாதம் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல்  டிவிஆர் மனோகரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.


வேளாங்கண்ணியில் பைனான்சியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான திமுக ஊராட்சி மன்ற தலைவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகர். டிவிஆர் மனோகர் என்று அழைக்கப்படும் இவர் அப்பகுதியில் பைனான்சியராகவும், வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றும் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல்  டிவிஆர் மனோகரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சென்னையில் பிரபல கஞ்சா வியாபாரி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. அலறி கூச்சலிட்டு ஓடிய பொதுமக்கள்.!

தடுக்க முயன்ற இதனை தடுக்க சென்ற அவரது நண்பர் மணிவேலுக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இந்நிலையில், பொய்கைநல்லூரை சேர்ந்த 10 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் கொலை வழக்கு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கருதப்படும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையும் படிங்க;-  கணவரை கழற்றிவிட்ட உஷாவை உஷார் செய்த கள்ளக்காதலர்கள்! உல்லாசத்திற்கு போட்டா போட்டி! இறுதியில் நடந்த அதிர்ச்சி

click me!