மணல் கடுத்தலை தடுக்க முயன்ற விஏஓ மீது லாரியை ஏற்ற கொல்ல முயற்சி; திண்டுக்கல்லில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Oct 13, 2023, 11:15 PM IST

பழனி அருகே வி.ஏ.ஓ மற்றும் உதவியாளர், காவலர்கள் என நான்கு பேர் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பொன்னிமலை சித்தன் கரடு பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளியதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் வந்துகொண்டு இருந்தது. அதன் அடிப்படையில், லாரியை பிடிக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி, உதவியாளர் மகுடிஸ்வரன், பொதுமக்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று லாரிகளை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டார். 

அப்போது ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த பாஸ் இல்லை என்பதும், வேறொரு பகுதியான தாதநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குலத்திற்கான பாஸ் வைத்திருப்பது தெரிய வந்ததது. இதையடுத்து காவல் நிலையத்திற்கு லாரிகளை கொண்டு செல்லுமாறு விஏஓ கருப்பசாமி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து லாரிகளை எடுத்துக்கொண்டு ஆயக்குடி காவல் நிலையம் செல்வதற்காக முன்னாள் லாரிகள் செல்ல விட்டு பின்னால் விஏஓ அவருடைய உதவியாளருடன் சென்று கொண்டிருந்தார். 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்போது திடீரென லாரிகளை வேகமாக இயக்கியும், பின்னால் இருசக்கர வாகனங்கள் பின் தொடராத வண்ணம் ஜிப்பில் வந்தவர்கள் இருசக்கர வாகனத்தை முந்தவிடாமல் அவர்களை வலது புறமும், இடது புறமும் வானத்தை இயக்கி லாரியின் பின்னால் கதவை திறந்து விட்டு மண்ணை மேலே கொட்டியும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் அச்சமடைந்த விஏஓ கருப்ப சாமி  ஆயக்குடி காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். 

விலை உயர்ந்த கேடிஎம் பைக்கை வாங்கி தர மறுத்த தாய்; இளைஞர் விபரீத முடிவு

இதனைத் தொடர்ந்து காவலர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். காவலர்கள் மீதும் லாரியை மேலே ஏற்றி மோதுவது போல் பாசாங்கு செய்துவிட்டு இரு லாரிகளையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.  அங்கிருந்த பொதுமக்கள் ஆயக்குடி காவல் நிலையத்தில் காவல்துறையினர் உள்ளிட்ட நால்வர் மீதும் லாரியை ஏற்றி கொலை முயற்சி செய்து லாரியுடன் தப்பி ஓடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி  வி.ஏ.ஓ. மற்றும் உதவியாளர் ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!