திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சொத்து தகராறில் தம்பியை அண்ணன் தீ வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமையா மகன் வானமாமலை என்ற கட்ட வானமாமலை (வயது 30). கூலி தொழிலாளியான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் இரவு அவர் தனது வீட்டு முன்புள்ள திண்ணையில் மது அருந்தி போதையில் தூங்கி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர்கள் அவரது உடலில் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டியா? லோடு மேன் தலையில் கல்லை போட்டு கொன்ற மைத்துனருக்கு வலை வீச்சு
சிறிது நேரத்தில் உடலில் வெப்பம் தாங்காமல் விழித்த வானமாமலை உடலில் தீ எரிவதை கண்டு சத்தம் போட்டுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து நாங்குநேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
விசாரணையில் வானமாமலை மற்றும் அவரது அண்ணன் குபேந்திரன் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. எனவே குபேந்திரனை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் சிகிச்சை பலனளிக்காமல் வானமாமலை நேற்று உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் குபேந்திரன் தனது தம்பி மீது தீ வைத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து குபேந்திரன் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. குடும்பத்தகராறில் அண்ணண் தனது உடன் பிறந்த தம்பியை எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.