பெற்ற தந்தையே பச்சிளம் குழந்தையை கூவம் ஆற்றில் வீசிய கொடூரம்; சென்னையில் பரபரப்பு

Published : Oct 12, 2023, 01:46 PM IST
பெற்ற தந்தையே பச்சிளம் குழந்தையை கூவம் ஆற்றில் வீசிய கொடூரம்; சென்னையில் பரபரப்பு

சுருக்கம்

சென்னையில் பச்சிளம் குழந்தை ஒன்று கூவம் ஆற்றில் வீசப்பட்ட நிலையில், தீயணைப்புத்துறை அதிகாரிகள் பைபர் படகு மூலம் குழந்தையை தேடி வருகின்றனர்.

சென்னை எழும்பூர் கோ ஆப் டெக்ஸ் அருகே கூவம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஒருவர் கட்டை பையில் குழந்தையை கொண்டு வந்து தூக்கி வீசியுள்ளார். இதனை அங்கு பணியில்  இருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் அறிந்து தீயணைப்பு துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போது தீயணைப்புத் துறையினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தையின் தந்தையே குழந்தையை தூக்கி வீசி சென்றுள்ளார். குழந்தையை வீசிய நபரை ஆயிரம் விளக்கு பகுதி போலீசார் கைது செய்து  அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம் பொறியாளர்; துக்கத்தில் விபரீத முடிவு

குழந்தையை தூக்கி வீசிய நபர் கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என முதற் கட்ட விசாரணயில் தெரிய வந்துள்ளது. மேலும் எழும்பூர்  மகப்பேறு மருத்துவமனையில் இந்த குழந்தை பிறந்ததாகவும், குழந்தை இறந்ததால் அதை கட்டை பையில் வைத்து தூக்கி எறிந்து விட்டு சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்து அழுததாகவும் குழந்தையின் தந்தை  விசாரணையில் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெண் அமைச்சர் பதவி விலகிய விவகாரம்; முதல்வர் மீது வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்க - நாராயணசாமி வலியுறுத்தல்

தற்போது தீயணைப்புத் துறையினர் பைபர் படகு மூலம் குழந்தையை  மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் கைது செய்ய பட்ட நபர் தெரிவித்து இருப்பது போலவே குழந்தை இறந்து வீசப்பட்டதா இல்லை உயிருடன் வீசப்பட்டதா? குழந்தையை தூக்கி எறிந்த நபர் மது போதையில் குழந்தையை தூக்கி வீசினாரா?  இல்லை அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா  என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!