
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தாலி கட்டிய கணவரை நான்கு கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா(28). இவரது மனைவி மதூரி. இந்நிலையில், மதூரிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெய்ஹிந்த் ரகுவர், குல்தீப் சதுர்வேதி, சோடூ பரிஹார், தீன்தயாள் ஆகிய 4 பேருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் சிவாவுக்கு தெரியவந்தது. இதனையடுத்து, மனைவி கண்டித்துள்ளார்.
இதனால், கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவரை கொலை செய்ய மனைவி திட்டமிட்டார். அதன்படி, சிவாவை அழைத்து சென்று மது விருந்து கொடுத்து போதை தலைக்கேறியதும் 4 கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவாவின் மனைவி மாதுரி மற்றும் அவரது கள்ளக்காதலர்கள் 4 பேரும் கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.