சென்னையில் ஒரே இரவில் இரண்டு பேர் ஓட ஓட விரட்டி கொலை.! முக்கிய சாலையில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் மக்கள்

By Ajmal Khan  |  First Published Sep 11, 2023, 9:12 AM IST

சென்னை மந்தவெளி மற்றும் எழும்பூர் பகுதியில் முன் விரோதம் காரணமாக நேற்று இரவு நடு ரோட்டில் இரண்டு பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கோயில் திருவிழாவில் கொலை

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேற்று இரவு இரு வேறு இடங்களில் நடைபெற்ற கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மந்தவெளி ரயில் நிலையம் அருகே உள்ள துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று ஆடி மாத திருவிழா நடைபெற்றுள்ளது. அம்மன் வீதி உலா, பாடல், கச்சேரி என கலை கட்டிய இந்த திருவிழாவின்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினரும் குடிபோதையில் இருந்ததால் வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில்,

Tap to resize

Latest Videos

சாலையில் ஓட ஓட விரட்டி கொலை

32 வயதான தினேஷ் கடுமையாக தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக  28 வயதான பார்த்திபனை அழைத்து சென்று அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சத்யா{வயது 22 ) இவர் மீது புழல் செங்குன்றம் பகுதி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சத்யா நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் எக்மோர் மாண்டியாத் சாலையில் மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்ட பகுதி மக்கள் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

கொலையாளி யார்.?

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எழும்பூர் காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு  உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் இளைஞர்கள் இரண்டு பேர்  ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எழும்பூர் பகுதியில் கொலை செய்த நபர்களை போலீசார் சிசிடிவு காட்சி மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

சுற்றுலா சென்று திரும்பிய வேன் மீது டிப்பர் லாரி மோதி விபத்து.. துடிதுடித்து பெண்கள் உட்பட 7 பேர் பலி
 

click me!