அட கடவுளே..விபரீத ஆசை.. கோலமாவு தயாரிக்க கல் எடுக்க சென்றபோது பரிதாபம்.. 2 பெண்கள் உயிரிழப்பு..

By Thanalakshmi VFirst Published Jan 19, 2022, 8:19 PM IST
Highlights

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுர் அருகே சாமநத்தம் கிராமத்தை சேர்ந்த நான்கு பெண்கள் சட்டவிரோதமாக செயல்பட்ட செங்கல் சூளையில் கோலமாவு தயாரிக்க கல் எடுத்துக்கொண்டிருந்த போது திடீரென்று ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுர் அருகே சாமநத்தம் கிராமத்தை சேர்ந்த நான்கு பெண்கள் சட்டவிரோதமாக செயல்பட்ட செங்கல் சூளையில் கோலமாவு தயாரிக்க கல் எடுத்துக்கொண்டிருந்த போது திடீரென்று ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஓசூரின் தளி பகுதிக்கு அருகே உள்ள சாமநத்தம் கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு செங்கல் தயாரிக்க 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி மண் எடுத்துள்ளனர். அப்படி மண் எடுத்தபோது 10 அடிக்கு கீழ் வெள்ளை நிற கற்கள் கிடைத்துள்ளது அப்பகுதி மக்களுக்கு தெரியவந்துள்ளது. 

இந்த கற்களை பொடி செய்து கோல போடுவதற்கு மாவாக பயன்படுத்தலாம் என்று விபரீத ஆசை அந்த கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராதா, லட்சுமி, உமி, விமலம்மா ஆகிய நான்கு பேர், இன்று அந்த பகுதிக்கு சென்று ஏற்கனவே தொண்டப்பட்ட 10 அடி குழியில் இறக்கி மேலும் குழி தோண்டியுள்ளனர். 
இதனிடையே அந்த நான்கு பேரும், ஆழமாக குழியை தோண்டி வெள்ளைநிற கற்கள் என்று சொல்லப்படும் அந்த கற்களை எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் மண் சரிந்து விழுந்துள்ளது. இதில் நான்கு பெண்களும் மண்ணில் சிக்கிக் கொண்டனர்.

இதைக்கண்ட அப்பகுதியில் இருந்த நபர்கள் பதறி போய் கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து தகவல் தெரிந்து ஓடி வந்த ஊர் மக்கள், மண்ணில் சிக்கி கொண்ட நான்கு பெண்களை மண்ணை அகற்றி மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராதா மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.மேலும் 2 பேரை மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். மண் சரிவால் ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!