முதலமைச்சர் வீட்டு வாசலில் கஞ்சா விற்ற போலீசார்.. விசாரணையில் பகீர் தகவல்கள்..!

By vinoth kumarFirst Published Jan 19, 2022, 2:13 PM IST
Highlights

முதலமைச்சர் வீட்டின் அருகே உள்ள சர்க்கிள் பகுதியில் ஒய்சாலா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிவக்குமாரும், சந்தோசும் 2 பேருடன் தகராறில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்கள் சிவக்குமார், சந்தோஷ் மற்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது சிவக்குமாரும், சந்தோசும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், அந்த 2 பேரிடம் கஞ்சா விற்பனை செய்ய கொடுத்ததும், கஞ்சா விற்ற பணத்தை தராததால் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 

முதலமைச்சர் வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கஞ்சா விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களா காவல் நிலையத்தில் சிவக்குமார், சந்தோஷ் ஆகியோர் காவலர்களாக பணியாற்றினார். இந்நிலையில், பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் வீட்டின் முன்பு சிவக்குமாரும், சந்தோசும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். 

இந்நிலையில், முதலமைச்சர் வீட்டின் அருகே உள்ள சர்க்கிள் பகுதியில் ஒய்சாலா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிவக்குமாரும், சந்தோசும் 2 பேருடன் தகராறில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்கள் சிவக்குமார், சந்தோஷ் மற்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது சிவக்குமாரும், சந்தோசும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், அந்த 2 பேரிடம் கஞ்சா விற்பனை செய்ய கொடுத்ததும், கஞ்சா விற்ற பணத்தை தராததால் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 

இதனையடுத்து, 4 பேரையும் ஆர்.டி.நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது பிரபல கஞ்சா விற்பனையாளர்களான அகில்ராஜ், அம்ஜத்கானிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து 2 போலீசார் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.  இதையடுத்து சிவக்குமார், சந்தோஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இவர்களை உயரதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததுள்ளது. ஒரு மாநில முதல்வர் வீடு முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரே கஞ்சா விறப்னையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!