நண்பர் மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்.. ஆத்திரத்தில் கணவர் செய்த காரியம்.. போலீசில் கதறிய வாலிபர்.!

Published : Jan 18, 2022, 09:04 AM ISTUpdated : Jan 18, 2022, 09:10 AM IST
நண்பர் மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்.. ஆத்திரத்தில் கணவர் செய்த காரியம்.. போலீசில் கதறிய வாலிபர்.!

சுருக்கம்

நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த  நிலையில் நண்பரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தனது நண்பர் இல்லாத நேரத்தில் அவரது மனைவியுடன் உல்லாசம் அனுபவித்து வந்தேன்.

கோவையில் மனைவியின் கள்ளக்காதலனை தாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே.புதூரை சேர்ந்தவர் 29 வயது வாலிபர். இவர் சாய்பாபா காலனி உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், நான் காந்திபுரத்தில் உள்ள பார்சல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். இந்நிலையில், நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த  நிலையில் நண்பரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தனது நண்பர் இல்லாத நேரத்தில் அவரது மனைவியுடன் உல்லாசம் அனுபவித்து வந்தேன்.

இந்த  கள்ளக்காதல் விவகாரம் நாளடைவில்  நண்பருக்கு தெரிய வந்தது. இதனால், மனைவியுடன் இருக்கும் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு என்னை கண்டித்தார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்று ஜாலியாக இருந்து வந்தேன். சம்பவத்தன்று நான் எனது வீட்டில் இருந்த போது என நண்பர் அவரது நண்பர்கள் 6 பேருடன் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் என்னை தாக்கி தகாத வார்த்தைகள் பேசி அவரது செல்போனில் என்னை ஆபாச வீடியோ எடுத்தார்.

பின்னர் அந்த வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினார். மேலும் அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் பணம் கொடுக்கும் படி மிரட்டி வந்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியிருந்தார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி