
நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கி உல்லாச காட்சியை கணவரே வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் இதற்கு முன்பும் நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாலியல் தொழில் ரகசியமாக நடந்து வந்துள்ளது. இதில் ஈடுபடுபவர்கள் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வாடிக்கையாளர்களை கவனித்து வந்தனர். ஆனால் இப்போது கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்ட மனைவி மாற்றும் குழுக்கள் பெரிய அளவில் செயல்பட்டது போலீஸ் உயர் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
14 குழுக்கள் ஒவ்வொரு குழுவிலும் 100-க்கும் மேற்பட்ட தம்பதிகள், அவர்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்ய சங்கேத வார்த்தைகள், குழுவின் ரகசியங்கள், வெளியே கசியாத அளவிற்கு செயல்பட்டது அனைவரையும் மிரள வைத்துள்ளது. தற்போது மனைவிகளை கைமாற்றும் சம்பவத்தில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கேரளா முழுவதும் இது தொடர்பாக 24 குழுக்கள் செயல்பட்டு வருவது ஏற்கனவே போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. கோட்டயம் அருகே கருகச்சால் பகுதியை சேர்ந்த 26 வயதான இளம்பெண் அளித்த புகாரை தொடர்ந்து தான் இந்த திடுக்கிடும் தகவல் வெளி உலகத்திற்கு தெரியவந்தது. அவர் அளித்த புகாரின் பேரில் தான் இந்த இளம்பெண்ணின் கணவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில்;- தன்னுடைய நண்பரின் வீட்டில் ஒரு குடும்ப விழா நடைபெறுகிறது என்று கூறி முதலில் மனைவியை அவர் அழைத்து சென்று உள்ளார். வீட்டுக்கு வந்த பிறகு தான் குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றது எதற்காக என்பது குறித்து மனைவியிடம் அவர் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம் பெண் பின்னர் செல்ல மறுத்து விட்டார்.
குழந்தைகளை கொன்று விடுவேன் என்று மிரட்டி அவர் தன்னுடைய மனைவியை பணிய வைத்து உள்ளார். அதன் பிறகு தனது மனைவி வேறு ஆண்களுடன் உல்லாசமாக இருப்பதை கணவரே ரகசியமாக வீடியோ எடுத்து உள்ளார். தொடர்ந்து வீடியோவை காண்பித்து மிரட்டி கடந்த 2 வருடமாக மனைவியை பலருக்கும் விருந்தாக்கி வந்துள்ளார். நாளுக்கு நாள் கணவனின் கொடுமை அதிகமானதால் தான் வேறு வழியின்றி இளம்பெண் போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.