தந்தை, இரண்டு மகள்களுடன் தற்கொலை.. கடைசி நொடியிலும் அப்பாவை கட்டிபிடித்தப்படி மரணம்..

Published : Jan 19, 2022, 07:06 PM ISTUpdated : Jan 19, 2022, 07:07 PM IST
தந்தை, இரண்டு மகள்களுடன் தற்கொலை.. கடைசி நொடியிலும் அப்பாவை கட்டிபிடித்தப்படி மரணம்..

சுருக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக ஆட்டோ ஓட்டுனர் தனது இரு மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக ஆட்டோ ஓட்டுனர் தனது இரு மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடம்பூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மூன்று பேரின் உடல்களை கண்ட அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போலீசார் அதில் பெரியவர் ஒருவரின் சடலத்தையும் இரண்டு குழந்தைகளின் சடலத்தையும் மீட்டனர். 

இந்நிலையில் சென்னை புதுப்பேட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஞானவேல் (44). இவரது மனைவி ஜெயந்தி (38). இவர்களுக்கு ஐஸ்வர்யா (5), பூஜா (3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஞானவேலை கடந்த 15-ஆம் தேதி முதல் தனது இரு மகள்களுடன் காணவில்லை என அவரது மனைவி ஜெயந்தி எழும்பூர் காவல் நிலைத்தில் நேற்று 18ஆம் தேதி புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் கடம்பூர் எனும் கிராமத்தில் கிணறு அருகே ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது விவசாய கிணற்றில் இறந்த நிலையில் 2 சிறுமிகளுடன் ஒரு நபர் இறந்த நிலையில் மிதப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். 

இதையடுத்து 3 பிரேதங்களையும் மீட்டு விசாரணை செய்ததில் அது எழும்பூரில் காணமல் போன ஞானவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் மறைமலைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஞானவேல் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டதாகவும் இதனால் ஞானவேல் கோபித்துக் கொண்டு தனது இரு மகள்களையும் ஆட்டோவில் அழைத்துக்கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் விவசாய கிணற்றில் இருந்து மீட்ட சடலங்களை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட பொழுது தந்தையை இரண்டு குழந்தைகளும் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!