காலில் வீழ்ந்து கெஞ்சியும் விடாத கணவர்.. மனைவியை நிர்வாணமாக்கி ஊர்வலம்.. என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Sep 2, 2023, 11:53 AM IST

மனைவியை நிர்வாணமாக்கி கணவனே கிராமத்தினர் முன்னிலையில் ஊர்வலம் நடத்திய சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. 


மனைவியை நிர்வாணமாக்கி கணவனே கிராமத்தினர் முன்னிலையில் ஊர்வலம் நடத்திய கொடூரச் சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கானா மீனா. இவருக்கும் பழங்குடியின பெண்ணுக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், அந்த பெண் வேறு ஒருவருடன் கள்ள உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தெரியவந்தது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- 17 வயது சிறுவனை இதற்காக தான் கொன்றேன்! 5 துண்டாக வெட்டி கூறுபோட்ட பயங்கரம்.. ஆட்டோ டிரைவர் கைது.!

இதனையடுத்து, தாலி கட்டிய மனைவி என்று கூட பாராமல் அடித்து உதைத்து வலுக்காட்டாயமாக  நிர்வாணமாக்கி ஊர்வலமாக கொண்டு சென்றார். அப்போது அந்த பெண் யாராவது காப்பாற்றுங்கள் என கதறி அழுதுள்ளார். ஆனால் அங்கு கூடியிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.

இதையும் படிங்க;- காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு காதலன் என்ன செய்தார் தெரியுமா? திருப்பூரில் நடந்த பயங்கரம்.!

இந்த நிர்வாண ஊர்வலத்தை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

click me!