லாட்ஜில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. டிக் டாக் பிரபலத்தை தூக்கிய போலீஸ் !

Published : Aug 08, 2022, 10:27 PM IST
லாட்ஜில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. டிக் டாக் பிரபலத்தை தூக்கிய போலீஸ் !

சுருக்கம்

டிக்-டாக்கில் பிரபலமானவர் பல்வேறு பெண்களுக்கு சோசியல் மீடியா மூலம் டார்ச்சர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா, திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் வினீத். இவருக்கு வயது 25. இவர் கேரளாவில் 'டிக்-டாக்'கில் பிரபலமானவராக இருக்கிறார். இவருக்கு கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர். அடிக்கடி சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் வினீத்துக்கு கொல்லம் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. 

மேலும் செய்திகளுக்கு..“ஆட்சிக்கு வந்து 15 மாசம் ஆச்சு.. ஒன்னும் செய்யல !” - திமுகவை டாராக கிழித்த அண்ணாமலை !

அதன்பிறகு அவர்கள் நெருங்கி பழகி வந்தனர். அந்த சமயத்தில் கல்லூரி மாணவிக்கு டிக்-டாக்கில் பிரபலமடைவது எப்படி ? என்பதை சொல்லி தருகிறேன் என்று கூறி உள்ளார். இதை நம்பிய கல்லூரி மாணவி, அவர் கூறியபடி திருவனந்தபுரம் வந்துள்ளார். அங்கு இருவரும் சந்தித்தனர். அப்போது வினீத் கார் வாங்க போவதாகவும், அதற்கு முன் முகத்தை கழுவி செல்லலாம் என்று கூறி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜூக்கு அழைத்து சென்றார்.

மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை ! இந்த தேர்வு எழுதினால் போதும்.. மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

அங்கு கல்லூரி மாணவியைவலுக்கட்டாயமாக, அவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வினீத்தின் செல்போனை அந்த மாணவி பார்த்தார். அப்போது வினீத்துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்டார். தான் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து தம்பானூர் போலீசில் மாணவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினீத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

PREV
click me!

Recommended Stories

ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி
கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்