உனக்கு என் தங்கச்சி கேட்குதாடா..? காதலனை பீர் பாட்டிலால் குத்தி கிழித்த அண்ணன்.

Published : Aug 08, 2022, 08:27 PM ISTUpdated : Aug 08, 2022, 08:40 PM IST
உனக்கு என் தங்கச்சி கேட்குதாடா..? காதலனை பீர் பாட்டிலால் குத்தி கிழித்த அண்ணன்.

சுருக்கம்

தங்கையின் காதலனை அந்தப் பெண்ணின் அண்ணன் பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

தங்கையின் காதலனை அந்தப் பெண்ணின் அண்ணன் பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது.

சமீபகாலமாக ஆணவ கொலைகள் பரவலாக நடந்து வருகிறது. மாநிலம், மொழி, இனம் கடந்து நாடு முழுவதும் ஆணவக் கொலைகள் அரங்கேறி வருவதை காணமுடிகிறது. ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என  கம்யூனிஸ்ட் மற்றும் தலித்திய இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. பெரும்பாலும் ஆணவக்கொலைகள் தலித் இளைஞர்களை குறிவைத்து அரங்கேறி வருகிறது.

உயர் சாதி பெண்களை காதலிக்கும் தலித் இளைஞர்கள் படுகொலைக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் காதலுக்குவுடன் படும் தங்கள் வீட்டு பெண்களையே கூட அவர்கள் ஆணவக் கொலை செய்கின்றனர். இந்த வரிசையில்  ஆந்திர மாநிலத்தில் ஆணவக்கொலை ஒன்று நிகழ்ந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- 

இதையும் படியுங்கள்: கோடிக் கணக்கில் வரதட்சணை.. நண்பர்களை வரவழைத்து புது மனைவி தலையில் சிறுநீர் கழித்து கணவன் அட்டூழியம்.

சூர்யா பேட்டை மாவட்டத்தில் மினி டேங்க் பண்ட் சத்தலா பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (19)  பக்கத்து ஏரியாவான தல்லா கட்டாவைச்  சேர்ந்த இளம்பெண் ஒருவரை திலிப் காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர், ஆனால் அவர்கள் உயிருக்குயிராய் காதலித்து வந்தனர்.

இதையும் படியுங்கள்:  இளம்பெண் மீதான தீராத ஏக்கம்! கம்பு கொல்லையில் வைத்து கதற கதற பலாத்காரம்!வெறி தீராததால் என்ன செய்தார் தெரியுமா?

அவர்களின் காதல் சம்பவம் அந்தப் பெண்ணின் சகோதரனுக்கு தெரிந்தது, தன் தங்கை காதலிப்பது அவனுக்கு அது கொஞ்சம்கூட பிடிக்கவில்லை, காதலன் திலீப் மீது அந்த இளைஞன் பயங்கர கோபத்தில் இருந்து வந்தான். கீழ் சாதியைச் சேர்ந்த திலிப் தனது தங்கையை திருமணம்  செய்துவிட்டால், அது தனது குடும்பத்தின் கௌரவத்திற்கு இழுக்காகி விடும் என முடிவு செய்த அந்த இளைஞன், காதலன் திலிப்பை கொலை செய்ய முடிவு செய்தான்,

பின்னர் திலீப்பிற்கு போன் செய்து காதல் விவகாரம் குறித்து பேச வேண்டும் என்றும் எனவே தன்னை சந்திக்க வருமாறு அழைத்துள்ளான். பேசுவதற்கு தானே அழைக்கிறார்கள் என நம்பி  காதலன் திலீப் கட்ட மைசம்மா கோவில் குளம் அருகே சென்றார், அப்போது அங்கு தயாராக அந்த பெண்ணின் அண்ணன் திலீப்பை  பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கியதுடன், பல இடங்களில் கண்மூடித்தனமாக குத்தினான், இதில் திலீப் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர், ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இளைஞர் தலைமறைவானான். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி
கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்