சென்னை, அம்பத்தூர் பானு நகரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கண்மணி. தம்பதியின் மகள் தனன்யா. அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தாள். தனன்யாவுடன் படிக்கும் சக மாணவி கனுஷ்யாவின் தாய் சிந்துஜாவுடன் கண்மணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..“ஆட்சிக்கு வந்து 15 மாசம் ஆச்சு.. ஒன்னும் செய்யல !” - திமுகவை டாராக கிழித்த அண்ணாமலை !
இந்நிலையில் தனன்யாவின் பள்ளித் தோழியான கனுஷ்யாவின் வீட்டிற்கு மகளை கண்மணி அழைத்துச் சென்றுள்ளார். அம்பத்தூரில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிந்துஜா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள நீச்சல் குளத்தில் சிந்துஜா, அவரது மகள் கனுஷ்யா, தனன்யா மற்றொரு சிறுவன் ஆகியோர் குளித்துக் கொண்டிருந்தனர். கண்மணி அருகில் உள்ள பூங்காவில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாதவிதமாக தனன்யா நீரில் மூழ்கினாள்.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கண்மணி மற்றும் சிந்துஜா, உடனடியாக அவளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த டாக்டர்கள், மேல் சிசிச்சைக்காக வானகரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை ! இந்த தேர்வு எழுதினால் போதும்.. மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?