ஆபாச வெப்சைட்டில் குடும்ப பெண்களின் டிக் டாக் வீடியோ! சைபர் கிரைம் போலீசில் 28 பேர் புகார்...

By sathish kFirst Published Sep 22, 2019, 11:38 AM IST
Highlights

டிக்டாக்கில் தங்கள் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 குடும்ப பெண்களின் வீடியோக்கள் ஆபாச வெப்சைட்டில் வெளியிட்டுள்ளதால் பெண்கள் பீதியில் உள்ளனர்.  

யாரென்றே தெரியாதவர்களுடன் அவர்களுக்கு ஏற்ற முகபாவத்துடன் ஆடிப் பாடி வீடியோ வெளியிட்டால் என்ன மாதிரியான விபரீதம் நடக்கும் என்பது சமீப காலங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதாவது டிக்டாக்கில் தங்கள் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 குடும்ப பெண்களின் வீடியோக்கள் ஆபாச வெப்சைட்டில் வெளியிட்டுள்ளதால் பெண்கள் பீதியில் உள்ளனர்.  

காலம் காலமாக   பெண்களின் சின்ன போட்டோ கிடைத்தாலே அதை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடும் கேவலமான ஜென்மங்கள் இன்னும் இந்த சமூகத்தில் உலாவிக்கொண்டுதான் இருக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் என்னதான் டிக்டாக் செயலியில் இப்படி வீடியோக்கள் [பதிவிட வேண்டாம் என எச்சரித்தாலும் நம்ம ஊர் பெண்கள் அதனை பெண்ணிய அடக்கு முறையாக நினைத்து காதில்வாங்கிவதே இல்லை.இப்படி பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில், டிக் டாக்கில் லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக துப்பாட்டாவை தியாகம் செய்து வீடியோ பதிவிட்ட குடும்பப் பெண்கள் சிலரின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் டிக்டாக் வீடியோவுக்கு அடிமைகளாக மாறி வீடியோ பதிவிடுவதையே பொழுதுபோக்காக செய்து வந்த பெண்களின் கவர்ச்சியான வீடியோக்கள் ஆபாச வெப்சைட்டில் பதிவிட்டுள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் மட்டும் 28 குடும்பப் பெண்களின் டிக்டாக் வீடியோக்களை சமூக விரோதிகள் ஆபாச வெப்சைட்டில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதையறிந்த சம்பந்தப்பட்ட பெண்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்து ஆபாச இணையதளங்களில் இருந்து அந்த வீடியோவை மட்டும் நீக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில தினங்களில் மட்டும் 28 பேர் டிக்டாக் வீடியோக்களை நீக்கக் கோரி புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புகார் அளித்தவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆபாச இணையதளங்களில் அந்த வீடியோக்கள் நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்களாம்.

click me!