வில்லிவாக்கத்தில் திருமண ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் பாலியல் ஈடுப்பட்டவர் போக்சோ சட்டத்தில் கைது...

Published : Sep 21, 2019, 07:10 PM ISTUpdated : Sep 21, 2019, 07:28 PM IST
வில்லிவாக்கத்தில் திருமண ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் பாலியல் ஈடுப்பட்டவர் போக்சோ சட்டத்தில் கைது...

சுருக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (24) இவர் தற்போது சென்னை கொளத்தூர் எம்ஜிஆர் நகரில் தங்கி அதே பகுதியில் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். 

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (24) இவர் தற்போது சென்னை கொளத்தூர் எம்ஜிஆர் நகரில் தங்கி அதே பகுதியில் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவர் வில்லிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசை வார்த்தை கூறி சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அந்த பெண்ணின்  பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 30ம் தேதி நள்ளிரவு மாணவியை அழைத்து சென்றுள்ளார்.

தன்னுடைய மகள் காணவில்லை என்று மாணவியின் பெற்றோர் கடந்த 31ம் தேதி காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த ராஜமங்கலம் போலீசார் விசாரணையில் மெக்கானிக் சதீஷுடன் பழக்கம் உள்ளதாகவும், போலீசார் இருவரையும் தேடி வந்த நிலையில்,  அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதை தெரிந்து கொண்டு அங்கு சென்று அந்த மாணவியை மீட்ட போலீசார் சதீஷை கைது செய்து அழைத்து வந்து வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி தலைமையில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சதீஷ்குமார் பள்ளி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று  பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவர மாணவியை போலீசார் கெல்லீஸ்ல் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்தனர். பள்ளி மாணவியிடம் பாலியலில் ஈடுபட்ட சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்...

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்