'உல்லாச வீடியோவை கணவருக்கு அனுப்பி விடுவேன்'.. பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த காவலர் கைது.!

By vinoth kumar  |  First Published Dec 10, 2021, 10:25 AM IST

கடந்த 2018ம் ஆண்டு கோவையில் பணிபுரியும் போது திருமணமான பெண் காவலருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 


பெண் காவலரின் ஆபாச புகைபடங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டிய ஆண் காவலரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் காவலராக  பணிபுரித்து வருபவர்  ஏழனை பாண்டி. இவர் கடந்த 2018ம் ஆண்டு கோவையில் பணிபுரியும் போது திருமணமான பெண் காவலருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதில் அந்த பெண் போலீசுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பெண் போலீஸ் பாண்டியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். சிறிது நாட்களில்  காவலர் ஏழனை பாண்டி தனது சொந்த மாவட்டமான நெல்லையில் உள்ள நாங்குநேரி காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்று விட்டார். அதன்பிறகு பெண் போலீஸ் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில், காவலர் ஏழனைபாண்டி மீண்டும் பெண் காவலருடன் தொடர்பை ஏற்படுத்த முயன்றுள்ளார். ஆனால், பெண் காவலர் ஏழனை பாண்டியை கண்டுகொள்ளவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த அவர், பெண் காவலருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த புகைபடங்களை சமூக வலைதளத்தில் பதிவிட போவதாகவும், உன்னுடைய கணவருக்குத் அனுப்பி விடுவேன் என்று பெண் காவலரை மிரட்டி பணிய வைக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் கோவை மாவட்ட சைபர் கிரைமில்  புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சைபர் கிரைம்  போலீசார் நாங்குநேரியில் இருந்த காவலர் ஏழனைபாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.

click me!