DMK: திமுக பிரமுகருக்கு 6 மாதம் சிறை தண்டனை.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published Dec 8, 2021, 4:45 PM IST
Highlights

காசோலை மோசடி செய்த வழக்கில் திமுக கிளைச் செயலாளர் சேகருக்கு 6 மாதம் சிறை தண்டனையும், கடனை திருப்பி செலுத்தாத பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கி ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

காசோலை மோசடி வழக்கில் திமுக கிளைச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி ஆம்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய கொம்மேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (52). இவர் திமுக கிளைச்செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். பெரிய கொம்மேஸ்வரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஆம்பூர் அடுத்த பெத்லகேம் பகுதியைச் சேர்ந்த அரங்கநாதன் என்பவர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் ரூ.2.60 லட்சம் பணத்தை சேகர் கடனாக பெற்றுள்ளார்.

இதையும் படிங்க;- சாதி மறுப்பு திருமணம் செய்த மகள்.. ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க தலையை துண்டித்து செல்ஃபி எடுத்த தாய், மகன்

இதையும் படிங்க;- Pugazhendhi: எடப்பாடியாருக்கு ஜால்ரா அடிக்கும் ஓபிஎஸ்.. பபூன் ஜெயக்குமார்.. இறங்கி அடிக்கும் புகழேந்தி.!

இந்த பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறி சேகர் காசோலை ஒன்றை அரங்கநாதனிடம் வழங்கினார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது அதில் பணம் இல்லை என திரும்பியது. இது தொடர்பாக அரங்கநாதன் ஆம்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், சேகர் பணம் பெற்று காசோலை வழங்கி மோசடி செய்தது உறுதியானது.

இதையும் படிங்க;- AIADMK:மிரட்டி கைப்பற்ற அதிமுக புறம்போக்கு நிலமல்ல.. எகத்தாளம் செய்யும் எலிகளே..சசியை மறைமுக தாக்கும் விந்தியா

இதனைத்தொடர்ந்து, காசோலை மோசடி செய்த வழக்கில் திமுக கிளைச் செயலாளர் சேகருக்கு 6 மாதம் சிறை தண்டனையும், கடனை திருப்பி செலுத்தாத பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கி ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

click me!