Crime: ஒரே நேரத்தில் 75 வயது கிழவி, மகள் பலாத்காரம் செய்து கொலை.. செக்ஸ் சைக்கோ பகீர் வாக்குமூலம்..!

By vinoth kumar  |  First Published Dec 9, 2021, 9:02 AM IST

சரோஜா, பூங்காவனம் தனியாக இருப்பதை நோட்டமிட்ட கவிதாஸ் வீடு புகுந்து அவர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் அவர் மயக்கமடைந்த பிறகு அவர்கள் 2 பேரையும் கவிதாஸ் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். 


புதுச்சேரி அருகே தாய், மகள் இரட்டை கொலையில் திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த சைக்கோ கொலையாளியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மூதாட்டி மற்றும் அவரது மகளை பலாத்காரம் செய்து கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

விழுப்புரம்  மாவட்டம் கண்டமங்கலம் அருகே கலித்திரம்பட்டு கந்தப்பன்சாவடி பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மனைவி சகோராஜா(80). இவரது மகள் பூங்காவனம்(60). இவருக்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. கணவரை பிரிந்து மகள் வள்ளியுடன்  தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 6ம் தேதி வள்ளி தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில் சரோஜாவும், பூங்காவனமும் தனியாக  வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். 

Latest Videos

இந்நிலையில், அதிகாலையில் அந்த வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தார். அப்போது அங்கு தூங்கி கொண்டிருந்த தாய்-மகள் 2 பேரையும் சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் சரோஜா, பூங்காவனம் ஆகியோர் அலறி துடித்தவாறு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, இருவரின் கழுத்தில் இருந்த  நகைகளை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த கொலை தொடர்பாக கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பான குற்றவாளியை பிடிக்க  6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இந்நிலையில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரை அடுத்த ஒட்டநந்தல் காலணி பகுதியை சேர்ந்த கவிதாஸ் (30) என்பதும் இவர் சரோஜா மற்றும் அவரது மகள் பூங்காவனம் ஆகிய 2 பேரையும் கொலை செய்ததும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதாசை கைது செய்தனர்.

இதனையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சரோஜா, பூங்காவனம் தனியாக இருப்பதை நோட்டமிட்ட கவிதாஸ் வீடு புகுந்து அவர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் அவர் மயக்கமடைந்த பிறகு அவர்கள் 2 பேரையும் கவிதாஸ் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது தெரியவந்தது. 

click me!