காதலை நிரூபிக்க மார்பில் பச்சை குத்த சொல்லி வற்புறுத்திய மிரட்டி காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலை நிரூபிக்க மார்பில் பச்சை குத்த சொல்லி வற்புறுத்திய மிரட்டிய காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அபினேஷ். இவரை அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக காதலை வளர்க்க, பல்வேறு இடங்களுக்கு சென்று இருவரும் ஜோடியாக செல்பி புகைப்படமும் எடுத்துள்ளனர். இந்நிலையில், எங்கே நாம் காதலி நம்மைவிட்டு சென்றுவிடுவார் என்ற பயத்தில் என்று காதலன் அபினேஷ் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி, தனது பெயரை நெஞ்சில் பச்சை குத்த வேண்டும், அப்போது தான் நீ உண்மையாக காதலிக்கிறாய் என நம்புவேன் என்று அந்த மாணவியை கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க;- இப்படி கூடவா ஒரு புருஷன் இருப்பான்.. மனைவியுடன் உல்லாசமாக இருந்தை வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்து மிரட்டல்.!
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி பச்சை குத்த மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபினேஷ், ஒருகட்டத்தில் செல்போனில் நாம் பேசிய வாய்ஸ் ரெக்கார்ட், ஜோடியாக எடுத்த செல்பி புகைப்படங்கள் அனைத்தையும் உன் பெற்றோர் மற்றும் அனைவருக்கும் காண்பித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால், அவரை தவிர்த்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அபினேஷ் மாணவியின் வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க;- "அண்ணா என்ன விட்ருங்க.. கெஞ்சிக் கதறியும் விடாமல் பெண்ணை வீடு புகுந்து தூக்கிச் சென்ற 15 பேர்.. பகீர் வீடியோ.!
இதனையடுத்து, மாணவியின் தந்தை இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குபதிவு செய்த காவல்துறையினர் காதலன் அபினேஷை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து அதில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வாய்ஸ் ரெக்கார்ட்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.