திருமணத்திற்கு முன்பு நீ யாரையோ காதலித்தாயே என்று கேட்டிருக்கிறார். படிக்கும்போது ஒருவரிடம் பழகினேன். அதன் பின்பு தொடர்பு இல்லை என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும், மனைவியின் முன்னாள் காதல் விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரவீன்குமார் தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
சென்னையில் மனைவியின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை காட்டி 30 லட்சம் பணம் கேட்டு கணவன் மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த நன்மங்கலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்ற நபருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின்னர் சில மாதங்கள் மகிழ்ச்சியாக இருந்த பிரவீன்குமார், அதன் பின்னர் தனது சுயரூபத்தை காட்ட தொடங்கினார். எந்நேரமும் மனைவியை டார்ச்சர் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
இதையும் படிங்க;- வெளிநாடு சென்ற கணவன்! சைடு கேப்பில் மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்க முயன்ற கொடூர தாய்! வெளியான பகீர் சம்பவம்
திருமணத்திற்கு முன்பு நீ யாரையோ காதலித்தாயே என்று கேட்டிருக்கிறார். படிக்கும்போது ஒருவரிடம் பழகினேன். அதன் பின்பு தொடர்பு இல்லை என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும், மனைவியின் முன்னாள் காதல் விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரவீன்குமார் தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். பின்னர், தனது மனைவியின் செல்போனில் அவர் படிக்கும்போது பழகியதாக கூறிய நண்பருடன் எடுத்துக்கொண்ட அழிக்கப்பட்ட புகைப்படங்களை சாப்ட்வேர் தொழில்நுட்பத்துடன் பிரவீன்குமார் மீண்டும் பதிவிறக்கம் செய்துள்ளார். அதை மனைவியிடம் காட்டியதும் அவர் அதிர்ந்து போயிருக்கிறார். அது மட்டுமல்லாமல் மனைவி குளிக்கும் போது அதை மறைந்து நின்று வீடியோ எடுத்து அந்த வீடியோவை காட்டி இருக்கிறார். மேலும், தன்னுடன் மனைவி உல்லாசமாக இருந்ததையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
பிரவீன்குமார் இந்த வீடியோக்களை வெளிவிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூபாய் 30 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் கூறி மகள் கதறி அழுதுள்ளார். இதுதொடர்பாக பெற்றோர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை. இறுதியில் விசாரித்தபோது அந்த பெண் காதலித்த நபரும் பிரவீன்குமாரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், திட்டமிட்டே இதைச் செய்ததும் தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜூடம் அந்த இளம்பெண் புகார் அளித்துள்ளார். கணவனே மனைவியின் ஆபாச வீடியோக்களை காட்டி பணம் கேட்டு மிரட்டி சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க;- பிரிந்து சென்ற காதல் மனைவி!ஏக்கத்தில்மச்சினிச்சிக்கு பிராக்கெட் போட அக்கா புருஷன் செய்த வேலையை நீங்களே பாருங்க