"அண்ணா என்ன விட்ருங்க; கெஞ்சிக் கதறியும் விடாமல் பெண்ணை வீடு புகுந்து தூக்கிச் சென்ற 15 பேர்; பகீர் வீடியோ.!

By vinoth kumar  |  First Published Aug 3, 2022, 11:10 AM IST

மயிலாடுதுறையில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீடு புகுந்து கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, விக்கிரவாண்டி டோல்கேட் அருகே இளம்பெண் மீட்கப்பட்டார்.


மயிலாடுதுறையில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீடு புகுந்து கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, விக்கிரவாண்டி டோல்கேட் அருகே இளம்பெண் மீட்கப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத் தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் விக்னேஸ்வரன் (34). இவர், மயிலாடுதுறையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது பட்டதாரி பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரனின் நடவடிக்கை சரியில்லாததால் அவருடன் பழகுவதை இளம்பெண்  இளம்பெண் நிறுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- புகார் கொடுக்க வந்த பெண்ணை கரெக்ட் செய்து புரட்டி எடுத்த இன்ஸ்பெக்டர்.. பணத்தையும் ஆட்டையை போட்டதால் ஆப்பு

இதையடுத்து விக்னேஷ்வரன் தான் காதலிப்பதாகக் கூறி அடிக்க தொந்தரவு செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் இவரின் தொந்தரவு அதிகரிக்கவே இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 2 முறை புகார் அளித்த நிலையில், போலீசார் இனி அந்த பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பினர். 

இந்நிலையில் கடந்த மாதம் 12-ம் தேதி விக்னேஷ்வரன் அப்பெண்ணை கடத்த முயற்சித்துள்ளார். அப்போது அவரிடம் இருந்து தப்பித்த இளம்பெண் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு பைக் மற்றும் காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் 15-க்கும் மேற்பட்டோர், அப்பெண் வீட்டுக்குள் நுழைந்து சினிமா பாணியில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர்.

இதையும் படிங்க;-  செஃபி எடுத்து திருமண நாளை கொண்டாடிய மனைவி திடீர் மாயம்.. காதலனுடன் சென்றது அம்பலம்.. கணவர் அதிர்ச்சி.!

இதுதொடர்பான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கடத்தப்பட்ட பெண் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே மீட்கப்பட்டார். மேலும் இளம்பெண்ணை கடத்தி சென்ற விக்னேஷ்வரன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வீடு புகுந்து இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க;-  AC வெடித்ததில் படுக்கையிலேயே உயிரிழந்த இளைஞர்! என்னை தனியா விட்டுட்டு போயிட்டியே!நெஞ்சில் அடித்து கதறிய மனைவி

click me!