காவல் துறைக்கே இது அவமானம்.. ஆட்கடத்தல் வழக்கில் 1 வருடமாக தலைமறைவாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது..

Published : Jun 11, 2022, 04:52 PM IST
காவல் துறைக்கே இது அவமானம்.. ஆட்கடத்தல் வழக்கில் 1 வருடமாக தலைமறைவாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது..

சுருக்கம்

தொழிலதிபரை கடத்திய வழக்கில்  ஓராண்டாக தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளரை சிபிசிஐடி தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். இது சென்னை காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

தொழிலதிபரை கடத்திய வழக்கில்  ஓராண்டாக தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளரை சிபிசிஐடி தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். இது சென்னை காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே சில நேரங்களில் குற்ற செயல்களில் ஈடுபடும் அவலங்கள் நடந்து வருகிறது. அது போன்ற ஒரு சில நடவடிக்கைகளால் காவல்துறையின் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் வெகுவாக குறைந்து வருகிறது. அந்த வகையில் தொழிலதிபர் ஒருவரை கடத்தி அவரது சொத்தை அபகரிக்க முயற்சி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த காவல் ஆய்வாளரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ், அவரது குடும்பத்தினர்களை சிலர் கடத்தி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சொத்துக்களை அபகரிக்க முயற்சித்தனர்.

இதுதொடர்பாக அவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் இந்த வழக்கு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொழிலதிபர் ராஜ்குமாரை கடத்தி சொத்துக்களை அபகரிக்க முயற்சித்ததாக திருமங்கலம் முன்னாள் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், கிரி, பாலா, சங்கர் மேலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் உட்பட 10 பேர்மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய  இந்து மகாசபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ என்கிற ஸ்ரீகுமார், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் வெங்கட், சிவநாக குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து தப்பிக்க  காவல்  உதவி ஆணையர் சிவக்குமார் தங்க இடம் பணம் கொடுத்து உதவிய மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனாலும் அங்கிருந்து தப்பி தலைமறைவாக உள்ள உதவி ஆணையர் சிவக்குமார் காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வழக்கு தொடர்பான பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளர் சரவணன் மதுரவாயல் அருகே தனது நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அத்தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர் அப்போது உள்ளே பதுங்கியிருந்த ஆய்வாளர் சரவணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர்அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வரும் உதவி ஆணையர் சிவக்குமாரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!