பெண்களை தவறாக பயன்படுத்தி கரு முட்டை எடுத்தால் 20 லட்சம் அபராதம் 8 ஆண்டு சிறை.. அமலுக்கு வந்தது புது சட்டம்..

Published : Jun 11, 2022, 03:12 PM IST
 பெண்களை தவறாக பயன்படுத்தி கரு முட்டை எடுத்தால் 20 லட்சம் அபராதம் 8 ஆண்டு சிறை.. அமலுக்கு வந்தது புது சட்டம்..

சுருக்கம்

சிறுமியை கற்பழித்த ஈரோட்டில் கரு முட்டை விற்பனை செய்யப்பட்டு வந்த விவகாரத்தையடுத்து தமிழகத்தில் இனப்பெருக்கத் தொழில்நுட்ப விதிமுறைகள் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

சிறுமியை கற்பழித்த ஈரோட்டில் கரு முட்டை விற்பனை செய்யப்பட்டு வந்த விவகாரத்தையடுத்து தமிழகத்தில் இனப்பெருக்கத் தொழில்நுட்ப விதிமுறைகள் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது தாயின் கள்ளக் காதலினால் கற்பழிக்கப்பட்டு 8க்கும் அதிகமான முறை அவரின் சினைமுட்டை எடுத்து விற்கப்பட்டு வந்தது. அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் தமிழக அரசு இதை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏற்கறவே வரையறுத்துள்ள இனப்பெருக்கத் தொழில்நுட்ப விதிமுறைகள் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

சிறுமியை தவறாக பயன்படுத்தி கருமுட்டை எடுத்து விற்பனை செய்யப்பட்டு வந்த விவகாரத்தில் சிறுமியின் தாய் சுமையா, மற்றும் அவரின் கள்ளக் காதலன் சையது அலி, இடைத்தரகர் மாலதி மற்றும் சிறுமியின் வயதை கூடுதலாக காட்டி ஆவணங்களை மாற்றி வழங்கிய ஜான் உட்பட 4 பேரை ஈரோடு போலீசார் கைது செய்தனர். இதைதொடர்ந்து ஈரோட்டில்ல பெருந்துறையில் உள்ள பிரபல  மருத்துவமனைகளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசால் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட assisted reproductive Technology regulation 2021 என்ற சட்டத்தை மாநில அரசு இதுவரை அமல்படுத்தாமல் இருந்துவந்தது. தற்போது ஈரோடு விவகாரத்தின் எதிரொலியாக இச்சட்டம் தமிழ்நாட்டில் உடனடியாக அமலுக்கு வரும் என தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி அறிவிப்பு செய்துள்ளது.

இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கு 5 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது. சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் தலைமையில் இந்தக் குழு இயங்கும் என்றும் குடும்ப நலத்துறை இயக்குனர் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த வசுதா ராஜசேகர், சட்டத்துறை உதவி செயலர், மகப்பேறு பேராசிரியர்  மோகனா உள்ளிட்டோர் இக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2005ஆம் ஆண்டு ஐ.சி.எம்.ஆர் வகுத்த வழிகாட்டுதல்கள் மட்டுமே  அமலில் இருந்தன. அதன்படி, இனி கருத்தரிப்பு மையங்கள் மாநில அரசிடம் பதிவு செய்திருக்கவேண்டும், லாப நோக்கில் அவர்கள் ஈடுபடக்கூடாது, 18 முதல் 35  வயதுடைய பெண்களிடமிருந்து மட்டுமே கரு முட்டைகளை எடுக்க முடியும் என விதிகள் அமலில் இருந்தது. தற்போது அமலுக்கு வந்திருக்கும் சட்டத்தின்படி, 23 முதல் 35 வயதுக்குள்ளான பெண்களிடம் மட்டுமே கருமுட்டைகள் எடுக்கமுடியும்.

வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கருமுட்டை எடுக்க முடியும், அதுவும் 7 முட்டைகள் மட்டுமே எடுக்க முடியும், சம்பந்தப்பட்ட மருத்துவர் முட்டை அளிக்கும் பெண்ணை எந்த வகையிலும் தவறாக பயன்படுத்தக்கூடாது. எந்த மோசடிகளிலும் ஈடுபடக்கூடாது, மீறி ஈடுபட்டால் முதல் முறை 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் அபராதம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், மீண்டும் தவறு செய்தால் 3 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை அமல்படுத்த மாநிலத்தில் விதிகள் அறிவிக்கப்படாமல் இருந்துவந்த நிலையில் ஈரோடு கருமுட்டை விவகாரத்தை தொடர்ந்து இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடதக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!