திருடிய பொருட்களை திருப்பி தந்த கொள்ளையன்… வியப்பில் ஆழ்ந்த காவக்துறையினர்!!

Published : Oct 30, 2022, 09:04 PM IST
திருடிய பொருட்களை திருப்பி தந்த கொள்ளையன்… வியப்பில் ஆழ்ந்த காவக்துறையினர்!!

சுருக்கம்

மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் திருடப்பட்ட பொருட்களை கொள்ளையன் ஒருவர் திருப்பி கொடுத்ததோடு தன் செயலுக்கு வருத்தமும் தெரிவித்த சம்பவம் காவல்துறையை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் திருடப்பட்ட வெள்ளி மற்றும் பித்தளைப் பொருட்களை கொள்ளையன் ஒருவர் திருப்பி கொடுத்ததோடு தன் செயலுக்கு வருத்தமும் தெரிவித்த சம்பவம் காவல்துறையை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடந்த 24 ஆம் தேதி அன்று லாம்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாந்திநாத் திகம்பர் ஜெயின் கோவிலில் இருந்து சத்திரஸ் எனப்படும் ஒரு குடை வடிவ அலங்கார துண்டு உட்பட 10 அலங்கார வெள்ளி துண்டுகள் மற்றும் மூன்று பித்தளை பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சூடு பிடிக்கும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு..! காவலாளியிடம் விசாரிக்க நேபாளத்திற்கு செல்ல சிபிசிஐடி திட்டம்

இதுக்குறித்து தகவலறிந்து வந்த போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். இதனிடையே கடந்த 28 ஆம் தேதி ஒரு ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் லாம்டாவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அருகிலுள்ள குழியில் ஒரு பை கிடப்பதைக் கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அந்த பையை ஆராய்ந்ததில் அதில் திருடப்பட்ட கோயில் பொருட்களும் கொள்ளையன் எழுதிய மன்னிப்பு கடிதமும் இருந்துள்ளனது.

இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி..! நெல்லையில் சிக்கிய துப்பாக்கி..? அதிர்ச்சியில் போலீஸ்

அந்த கடிதத்தில், எனது செயலுக்கு மன்னிப்பு கேட்கிறேன். நான் தவறு செய்துவிட்டேன், என்னை மன்னியுங்கள். திருட்டுக்குப் பிறகு நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று வருத்தம் தெரிவித்திருந்தார். இதை அடுத்து திருடப்பட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றியதுடன் கொள்ளையனை கைது செய்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொள்ளையன் திருடிய பொருட்களை திருப்பி தந்ததோடு தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தது காவல்துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!