கோவை கார் வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோயிலில் இருந்த பூசாரியிடம் சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தனர்
கோவை கார் வெடி விபத்து
கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள சங்கமேஷ்வரர் கோவில் வாசலில் கடந்த 23ஆம் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த ஜமேசாமுபின் என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார். மேலும் கோவில் அருகே கார் வெடித்து சிதறியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வெடித்து சிதறிய காரின் எண்ணை வைத்து தற்போதைய உரிமையாளர் ஜமேசா முபின் என்பதை கண்டு பிடித்த போலீசார் அவரது வீட்டில் சென்று சோதனை நடத்திய போது வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
குற்றவாளிகள் கைது
கார் வெடி விபத்து தொடர்புடையதாக முகமதுதல்கா, முகமது அஸாரூதின், முகமதுரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் , அப்சர்கான் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியது. இதன் அடிப்படையில் மத்திய அரசு இந்த வழக்கை நேற்று என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியது. அதன் முதல் தகவல் அறிக்கையும் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் துணை ஆணையர் வீரபாண்டி தேசிய புலனாய்வு முகமை அதிகாரி விக்னேஷிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்துள்ளார்.
அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்! இதெல்லாம் அபத்தம் - எச்சரித்த தமிழ்நாடு காவல்துறை !!
என்ஐஏ அதிகாரிகள் சோதனை
இந்த நிலையில் இன்று கோவையில் கார் வெடி விபத்து நடைபெற்ற கோயில் முன்பு 6 என்ஐஏ அதிகாரிகள் சேதனையில் ஈடுப்பட்டனர் அப்போது கோவில் பூசாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். கார் சிலிண்டர் குண்டு வெடிப்பில் தனிப்படையில் இருந்த ஆய்வாளர் அமுதா மற்றும் ஆய்வாளர் கண்ணையன் உள்ளிட்ட அதிகாரிகள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு கார் வெடி விபத்து சம்பவம் தொட,ர்பாக விளக்கம் கொடுத்தனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்கு வருவதையொட்டி கோவில் முன்பு தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிடம் ஈடுபட்டனடர். சுமார் 2 மணி நேர விசாரணைக்கு பிறகு என்ஐஏ அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
இதையும் படியுங்கள்
திமுகவினராக செயல்படும் டிஜிபி..! ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் கொடுக்கப்படும்..! அண்ணாமலை ஆவேசம்