சூடு பிடிக்கும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு..! காவலாளியிடம் விசாரிக்க நேபாளத்திற்கு செல்ல சிபிசிஐடி திட்டம்

By Ajmal KhanFirst Published Oct 30, 2022, 1:20 PM IST
Highlights

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்ற செயலில் ஈடுபட்ட சயான் ,வாளையார் மனோஜ் உட்பட பத்து பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டம். அதேபோல் தற்கொலை செய்து கொண்ட கணினி பொறியாளர் தினேஷின் தந்தையிடமும் விசாரணை நடத்த முதல் கட்டமாக  முடிவு செய்துள்ளனர். 
 

கொடநாடு கொலை வழக்கு

கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு அண்மையில் மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்நிலையில் இவ்வழக்கு சம்மந்தமாக கடந்த ஒருவருட காலமாக தனிப்படை போலீசார் 316 பேரிடம் நடத்திய 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை ஆவண நகல்களை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த வந்த நீதிபதி முருகன் மற்றும் சிபிசிஐடி புலனாய்வு அதிகாரிகளிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதன் அடிப்படையில் இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடி டிஜிபி ஷக்கில் அக்தர் தலைமையில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கடந்த நான்கு நாட்களுக்கு முன் சம்பவம் நடைபெற்ற கோடநாடு எஸ்டேட் பங்களாவில் விசாரணையில் ஈடுபட்டனர்.

பொறுப்பற்ற முறையில் அரசியல் செய்ய முயலும் ஆளுநர்..! உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்- கே பாலகிருஷ்ணன்

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதியை ஆய்வு மேற்கொண்டும், அந்தப் பகுதிகளை புகைப்படங்களை எடுத்தும் பதிவு செய்து கொண்ட சி பி சி ஐ டி அதிகாரிகள், உள்ளே பணிபுரியும் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ஆய்வு மேற்கொண்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு காவல்துறையினர், ஏடிஎஸ் பி முருகவேல் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. 

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 10 கிலோவில் வெள்ளி கவசம்..! இபிஎஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஓபிஎஸ்

 சிபிசிஐடி டிஎஸ்பி சந்திரசேகர், சிபிசிஐடி டிஎஸ்பி வினோத், சிபிசிஐடி டிஎஸ்பி அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்ற செயலில் ஈடுபட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட பத்து பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் தற்கொலை செய்து கொண்ட கணினி பொறியாளர் தினேஷின் தந்தையிடமும் விசாரணை நடத்த முதல் கட்டமாக முடிவு செய்துள்ளனர்.

மேலும் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற 2017 ம் ஆண்டு இரவு பணியில் இருந்த கிருஷ்ணதாபா, ஓம்பகதூர் இரவு காவல் பணியில் இருந்தபோது கொள்ளையர்கள், எஸ்டேட்டுக்குள் நுழைந்து ஓம்பகதூரை கொலை செய்யப்பட்ட நிலையில் கிருஷ்ணதாபா அப்பகுதியில் இருந்து தப்பி சென்று தற்போது கிருஷ்ணதாபா தன் குடும்பத்துடன் நேபாளில் வசித்து வரும் நிலையில், இவ்வழக்கு குறித்து விசாரிக்க கிருஷ்ணதாபாவை அழைத்து வர நேபாள் செல்ல சிபி சிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

கொடநாடு கொலை வழக்கு..! டிசம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு - உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு

click me!