பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு, முதல்வரை கட்டிப்பிடித்துக் கொண்ட மாணவி.. காரணம் என்ன தெரியுமா?

By Ezhilarasan BabuFirst Published Aug 20, 2022, 3:15 PM IST
Highlights

டிசி கொடுக்காமல் கல்லூரி நிர்வாகம் அலைக்கழித்து வந்ததால் கல்லூரி மாணவி தீக்குளித்து  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது உடலில் பெட்ரோல் ஊற்றி  தீ வைத்துக் கொண்ட மாணவி கல்லூரி முதல்வரை கட்டிப்பிடித்ததில் அவரும் படுகாயமடைந்துள்ளார்.
 

டிசி கொடுக்காமல் கல்லூரி நிர்வாகம் அலைக்கழித்து வந்ததால் கல்லூரி மாணவி தீக்குளித்து  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது உடலில் பெட்ரோல் ஊற்றி  தீ வைத்துக் கொண்ட மாணவி கல்லூரி முதல்வரை கட்டிப்பிடித்ததில் அவரும் படுகாயமடைந்துள்ளார்.

கல்வி என்பது தனி மனித பிறப்புரிமை, ஆனால் பலருக்கு பொருளாதார அடிப்படையில் கல்வி  மறுக்கப்பட்டு வருகிறது. இதைகலைய அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் மூலம் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இது ஒருபுறம் உள்ள நிலையில்  கல்வி என்பது வியாபாரம் ஆக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டும் மறுபுறம் உள்ளது. குறிப்பாக மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வியில் அதிக கட்டணத்தை கல்லூரி நிர்வாகங்கள் கொள்ளையடித்து வருகின்றன.

இதையும் படியுங்கள்: பாலியல் உணர்வை தூண்டும் வகையில் ஆடை.. பெண்ணை மடியில் அமரவைத்து அசிங்கம்.. குற்றமே இல்ல , நீதிபதி கருத்து.

இதற்கிடையே கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது, மாணவிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் போன்ற கொடூரங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த வரிசையில் கல்லூரி மாணவி ஒருவர் முதல்வர் அறையில்  தீக்குளித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- ஐதராபாத் ரமந்தபூராவில் நாராயணா என்ற கல்லூரி இயங்கி வருகிறது, கல்லூரியில் பயின்று வந்த வித்யா ஆர்த்தி என்ற மாணவி டிசி வாங்குவதற்காக கல்லூரிக்கு வந்துள்ளார். ஆனால் அவருக்கு டீசி கொடுக்காமல்  கல்லூரி நிர்வாகம்  அவரை அலைகழித்து வந்ததாக தெரிகிறது. 

இதையும் படியுங்கள்: காதலனுடன் துபாய் பறந்த மனைவி.. அடிக்கடி வீடியோ கால் செய்து கணவன், குழந்தைகளை கிண்டல் செய்து கொடுமை.

இதனால் கடந்த சில தினங்களாகவே அவர் கல்லூரிக்கு  வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் அக் கல்லூரியின் முதல்வர் சுதாகர் ரெட்டி சந்தித்து அவர் தனக்கு டீசி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் சுதாகர் ரெட்டி அதை பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார். இலைகள் கல்லூரிக்கு பெட்ரோல் கேனுடன் வந்த மாணவி, முதல்வர் அருகில் சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார், அவர் உடல் முழுவதும் தீ பரவியது, அவர் உடல் எரிந்து கொண்டிருந்த போதே அருகில் இருந்து முதல்வர் சுதாகர் ரெட்டியை கட்டிப்பிடித்தார். அதில் முதல்வரின் உடலில் தீ பற்றிக் கொண்டது. இருவரும் அனல் தாங்க முடியாமல்  அலறினர். 

இதைக்கண்ட ஊழியர்கள் கூச்சலிட்டனர், இதனையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தனர் ஆனால்  இருவரும் தீயில் கருகினார் இதுதொடர்பாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர், இந்நிலையில் இருவரும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், கல்லூரியில் முதல்வர் அறையில் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிசி வாங்க வந்த மாணவி ஏன் தீக் குளித்தார், அவர் முதல்வரை ஏன் கட்டிப்பிடித்தார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 
 

click me!