படம் ஓடாததால் வேறொருவருடன் ஜாலியாக இருந்த மனைவி!! கொல வெறியில் வெட்டி சிதைத்த இயக்குனர்!!

Published : Feb 06, 2019, 12:11 PM ISTUpdated : Feb 07, 2019, 03:09 PM IST
படம் ஓடாததால் வேறொருவருடன் ஜாலியாக இருந்த மனைவி!!   கொல வெறியில் வெட்டி சிதைத்த இயக்குனர்!!

சுருக்கம்

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்து எடுக்கப்பட்ட பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும் குடும்ப சண்டையில் கணவனே துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டியில் வீசியது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பெருங்குடி குப்பை கிடங்கில் வீசப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் மீட்கப்பட்ட நிலையில், 3 கோணத்தில் காணாமல் போன பெண்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலை மற்றும் உடலை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக தரம் பிரிக்கும் குப்பை கழிவுகள் அனைத்தும் பெருங்குடி குப்பை கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், பெருங்குடி குப்பை கிடங்கில் வழக்கமாக சில பெண்கள் மற்றும் இளைஞர்கள் பிளாஸ்டிக், பேப்பர் உள்ளிட்ட பொருட்களை சேகரிப்பது வழக்கம். அதேபோல, கடந்த திங்கட்கிழமை மாலை, அங்கு சில பெண்கள் குப்பையை கிளறிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு பை கிடந்தது. அதை பிரித்துப் பார்த்தபோது, இளம்பெண் ஒருவரின் 2 கால்கள், ஒரு கை இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இந்த தகவல் பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.

பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் போலீசார் படையோடு விரைந்து சென்று நடத்திய சோதனையில் அது ஒரு பெண்ணின் கை மற்றும் கால்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. அதில், வலது கையில் டிராகன் படமும் வலது கை தோள் பட்டையில் சிவன், பார்வதி உருவமும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. காலில் பெண்கள் அணியும் மெட்டி போட்டதற்கான அடையாளம் இருந்தது. 

இதையடுத்து கை, கால்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசியது யார்? என்பது குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கை கால்கள் எந்தப்பெண்ணுடையது என்பதை கண்டறிந்துள்ளனர்.

2 வாரமாக போலீசார் விசாரித்து வந்ததில் வெட்டப்பட்ட பெண் சந்தியா என தெரிய வந்தது. சந்தியா கொலை தொடர்பாக அவரது கணவர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய பாலகிருஷ்ணன் திரைப்பட துணை இயக்குனர் ஆவார். கை, கால்கள் மட்டுமே கிடைத்த நிலையில் மற்ற பாகங்கள் எங்கே என பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடைபெறுகிறது.

விசாரணையில், கடந்த 2010-ம் ஆண்டு காதல் இலவசம் என்ற படத்தை  பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். மேலும் மனைவி சந்தியா பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அந்த படத்தை பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்த படம் ஓடாத காரணத்தினால் வாய்ப்புகள் இல்லாமல், நண்பர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாக பிரச்சனை நடந்து கணவன்-மனைவி இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது மனைவி வேறு ஒரு இளைஞருடன் காதல் இருந்துள்ளதால், இவர்கள் பழகுவதை தெரிந்த கணவர் பாலகிருஷ்ணன், காதலித்து கல்யாணம் செய்த மனைவி தனது நிலையை காரணம் காட்டி வேறொருவருடன் இப்படி கள்ளத் தொடர்பில் இருக்கிறாரே என்ற கோபத்தில்  ஜாபர்கான்பேட்டை வீட்டில் வைத்து சந்தியாவை கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் சந்தியாவை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை குப்பையில் வீசி எறிந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கணவரை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின் பேரில் ஜாபர்கான்பேட்டை பகுதியில் காசி தியேட்டர் அருகே சந்தியாவின் மற்ற உடல் பாகங்களை தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..