பாதுகாப்பு பணிக்கு சென்ற இடத்தில் "ராம்ப் வாக்’’ சென்ற போலீசார்.. பணியிட மாற்றம் செய்து SP ஆக்ஷன்.

By Ezhilarasan BabuFirst Published Aug 4, 2022, 7:44 PM IST
Highlights

பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீசார் அங்கு நடைபெற்ற  அழகுப் போட்டி மேடையில் ராம்ப் வாக் செய்ததால் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது  சக காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீசார் அங்கு நடைபெற்ற  அழகுப் போட்டி மேடையில் ராம்ப் வாக் செய்ததால் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது  சக காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துறை ரீதியாக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை என்றாலும் மன அழுத்தத்தில் உள்ள காவலர்களுக்கு இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்க வேண்டுமே தவறி நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

கடுமையான பணிச்சுமைகளுக்கு மத்தியில் பணியாற்றுத் துரையாக காவல்துறை உள்ளது. குடும்ப நிகழ்ச்சி, திருவிழாக்கள் என அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு மக்கள் சேவையாற்றி வருகின்றது காவல் துறை,  தற்போதுள்ள அரசுத் துறைகளிலேயே அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் துறை எது என்றால் அது தமிழக காவல்துறை என்றே கூறலாம். காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் அடிக்கடி தற்கொலை, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை போன்ற துயரங்களில் ஈடுபட்டு  வருகின்றனர். அதிக பணிச்சுமை மன அழுத்தமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஒட்டு துணி இல்லாமல் வீடியோ காலில் அந்தரங்க உறுப்பை காட்டும் எம்.பி.. கருமம், தலையில் அடித்துக் கொள்ளும் மக்கள்

போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க அவர்களுக்கு வாரம் ஒரு முறை விடுப்பு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்துதல் போன்ற வற்றை ஊக்கப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் இருந்து வருகிறது. இது ஒருபுறம் உள்ள நிலையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீசார் அந்த மேடையில் ராம்ப் வாக்கில் ஈடுபட்டார்கள் என்பதற்காக அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது காவல் துறை மட்டுமின்றி மக்கள் மத்தியிலும்  பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படியுங்கள்: 'நீங்க லெஸ்பியன்தானே'? சக மணவிகள்,பேராசிரியர்கள் கிண்டல்..மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவிகள் தற்கொலை முயற்சி

முழு விவரம் பின்வருமாறு:-  மயிலாடுதுறை செம்பனார்கோவிலில் தனியார் அமைப்பின் சார்பில் அழகு போட்டி நடைபெற்றது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சினிமா நடிகை யாஷிகா ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் அழகு போட்டி நடைபெற்றது. ஏராளமானோர் அங்கு வண்ண வண்ண உடையில் வந்து மேடையில் ராம்ப் வாக் போட்டு  அழகை வெளிப்படுத்தினர். அதில்  திருமணமான பெண்கள் அழகிய வண்ண வண்ண உடைகளில் ராம்ப் வாக் பயின்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான தெறி பட பாடல் பின்னணியில் கம்பீரமாக ராம்ப் வாக் செய்தனர். இதற்கான வீடியோ சமூகவலைதளத்தில் வைரல் ஆனது, இந்நிலையில் ராம்ப் வாக்கில் ஈடுபட்ட காவலர்களை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யது நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இதை திரும்ப பெற வேண்டும் என்று பலரும் சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். 
 

click me!