'நீங்க லெஸ்பியன்தானே'? சக மணவிகள்,பேராசிரியர்கள் கிண்டல்..மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவிகள் தற்கொலை முயற்சி

By Ezhilarasan BabuFirst Published Aug 4, 2022, 2:42 PM IST
Highlights

லெஸ்பியன் என கூறி கல்லூரி மாணவிகளை சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கிண்டல் செய்து வந்த நிலையில் மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லெஸ்பியன் என கூறி கல்லூரி மாணவிகளை சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கிண்டல் செய்து வந்த நிலையில் மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி விடுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி விடுதியில் இரண்டு மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த 19 வயது இளம் பெண் மற்றும் வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகிய இருவரும் மருத்துவமனை விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு கால்நடை மருத்துவம் பயின்று வருகின்றனர்.

இரண்டு மாணவிகளும் நெருங்கிய தோழிகளாக இருந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் வெளியில் சென்று விட்டு விடுதிக்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது, அதுமட்டுமின்றி எப்போதும் இணை பிரியாமல் மாணவிகள் இருந்து வந்ததால், மாணவிகள் குறித்து பலரும் சந்தேகம் அடைந்தனர்.

மாணவிகளை சக மாணவிகள் லெஸ்பியன் எனக்கூறி கிண்டல் செய்து வந்துள்ளனர், இதேபோல பேராசிரியர்களும் மாணவிகளை கேலி செய்து வந்ததாக தெரிகிறது. தங்கள்  நடத்தையைப் பலரும் சந்தேகித்து வந்ததால் மாணவிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாயினர்.

இந்நிலையில் நேற்று மதியம் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இருந்த மெர்க்குரி சல்பைடு என்ற வேதிப்பொருளை மாணவிகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர், ஒரு மாணவி உணவு உட்கொள்ளும் போது அதை அருந்திய நிலையில், மற்றொரு மாணவிகள் அதை வாங்கி அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை கண்ட சக  மாணவிகள் அதிர்ச்சி அடைந்ததுடன் இருவரையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாணவிகள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் சிகிச்சையின் பலனாக ஆபத்துக் கட்டத்தைத் தாண்டியுள்ளனர். ஆனால் இருவரும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

தகவலறிந்த வேப்பேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சக மாணவிகள் மற்றும் விடுதி கண்காணிப்பாளர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவி  தனது பாலியல் சீண்டல் தொடர்பாக புகார் அளிக்காவிட்டாலும் போலீசார் தன்னிச்சையாக விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்துள்ளனர் இதேபோல இந்த வழக்கிலும் விசாரணை நடைபெறுகிறது என அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் பெரியார் குறித்து அவதூறாக பேசிய கனல்கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கனல் கண்ணனுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிடுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 

click me!