வாடகைக் காதலியை பளார் பளார் என அறைந்த போலீஸ் எஸ்.ஐ.. நிர்வாணமாக நிற்க போவதாக மிரட்டிய இளம் பெண்.

Published : Aug 27, 2022, 04:54 PM ISTUpdated : Aug 27, 2022, 04:59 PM IST
வாடகைக் காதலியை பளார் பளார் என அறைந்த போலீஸ் எஸ்.ஐ.. நிர்வாணமாக நிற்க போவதாக மிரட்டிய இளம் பெண்.

சுருக்கம்

காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் தன்னைத் தேடி வந்த டிக்டாக் காதலியை மப்டி உடையில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பளார் பளார் கன்னத்தில் அறைந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது.  

காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் தன்னைத் தேடி வந்த டிக்டாக் காதலியை மப்டி உடையில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பளார் பளார் கன்னத்தில் அறைந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது.  இதனையடுத்து  அந்த உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்க்கும் பலரும் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் இந்த  உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். முழு விபரம் பின்வருமாறு:- காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக  பணியாற்றுபவர் சோமசுந்தரம், இவர் டிக் டாக் போன்ற மற்றொரு ஆப்பிள் அடிக்கடி வீடியோ பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அதில் பிரபல டிக் டாக் பிரியாவுடன் இவருக்கு நட்பு ஏற்பட்டது, பின்னர் பிரியாவுடன் சேர்ந்து பல வீடியோக்களை அவர் வெளியிட்டு வந்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  தற்கொலைக்கு முயன்ற சிறுமி! அலேக்கா தூக்கி சென்று முட்புதரில் வைத்து புரட்டி எடுத்த கொடூரனுக்கு சரியான ஆப்பு.!

அதேநேரத்தில் பிரியாவுடன் அவர் திருமணத்திற்கு புறம்பான உறவிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது, இதில்தான் அவருக்கு திடீரென சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி கிடைத்தது, பதவி உயர்வு கிடைத்ததும் பிரியாவை விட்டு ஒதுங்க ஆரம்பித்தார், இதனால் இருவருக்குமிடையே தகராறு இருந்து வந்தது, அதேநேரத்தில் பிரியாவின் தம்பியை பொய் புகாரில் போலீசிடம் பிடித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதினால் ஆத்திரமடைந்த பிரியா தனக்கும் எஸ்.ஐ சோமசுந்தரத்திற்கும் இடையேயான பழக்கத்தை அவரது மனைவியிடம் போட்டுக் கொடுத்துள்ளார், பின்னர் அவரது மாமனார் வீட்டிற்கும் விஷயத்தை பரப்பினார் பிரியா.

இதையும் படியுங்கள்: ஐயோ என்ன கொல்ல வராங்க.. காப்பாத்துங்க! காப்பாத்துங்க! பொதுமக்கள் மத்தியில் ரவுடியை வெட்டி கூறுப்போட்ட கும்பல்

இதனால் எஸ்.ஐ சோமசுந்தரம் குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது, இதனால் சோமசுந்தரம் கடும் ஆத்திரத்தில் இருந்தார், இந்நிலையில் தான் காவல் நிலையத்திற்கு வந்த பிரியா செல்போனில் வீடியோ எடுத்தபடியே சோமசுந்தரத்திடம் பேச்சு கொடுத்தார், பிரியாவை பார்த்ததும் கொந்தளிப்பான சோமசுந்தரம், அந்தப் பெண்ணை பளார் பளார் என கன்னத்தில் அறைந்தார், அதை வெறோருவர் தனது செல்போனில் பதிவு செய்தார், பின்னர் பிரியாவின் செல்போனை சோமசுந்தரம் பறித்துக் கொண்டார், இதனால் அவர் காவல் நிலைய வாசலில் நிர்வாணமாக நிற்கப் போவதாக கூறி சமுவை மிரட்டினார். அதில் பயந்து போன சோமசுந்தரம் அந்த பெண்ணிடமே செல்போனை திருப்பிக் கொடுத்தார்.

இதனையடுத்து அங்கிருந்து செல்லுமாறு அந்த பெண்ணை விரட்டினார் சோமசுந்தரம், பின்னர் அந்த பெண்ணை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனரையும் தாக்கினார்,  அப்போது ஆட்டோவில் இருந்து வெளியில் வந்த வயதான பெண்மணி ஒருவர், உனக்கு கேட்ட நேரத்தில் எல்லாம் பெண்களை அனுப்பி வைத்தேனே எனக்கூறி சோமசுந்தரத்தை பொது இடத்தில் அம்பலப்படுத்தினார், இதை அங்கிருந்த பலரும் வேடிக்கை பார்த்தனர், அப்போது அந்த மூதாட்டியையும் அவர் தாக்க முற்பட்டார், பின்னர் அங்கிருந்தவர்கள் சோமசுந்தரத்தை சமாதானப்படுத்தினர்,

சோமசுந்தரம் உயரதிகாரிகளுடன் நட்பாக பழகி காவல்துறைக்கே களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் சக காவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர், அதற்குள்  பெண்ணை கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளத்தில்  வைரலானது, அதனைத் தொடர்ந்து சோமசுந்தரம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!