தற்கொலைக்கு முயன்ற சிறுமி! அலேக்கா தூக்கி சென்று முட்புதரில் வைத்து புரட்டி எடுத்த கொடூரனுக்கு சரியான ஆப்பு.!

Published : Aug 27, 2022, 02:06 PM IST
தற்கொலைக்கு முயன்ற சிறுமி! அலேக்கா தூக்கி சென்று முட்புதரில் வைத்து புரட்டி எடுத்த கொடூரனுக்கு சரியான ஆப்பு.!

சுருக்கம்

சென்னையில் தற்கொலைக்கு முயன்ற சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னையில் தற்கொலைக்கு முயன்ற சிறுமியை கடத்தி பாலியல் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் பாரதியார் நகரை சேர்ந்த 14 வயது சிறுமி. அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமிக்கு படிக்க விருப்பம் இல்லாமல் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி  தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்ற போது கயிறு அறந்துவிட்டது. 

இதனால் கோபமடைந்த சிறுமி, ஆற்றிலோ, குளத்திலோ குதித்து தற்கொலை செய்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வீட்டை விட்டு வெளியேறி அழுதுகொண்டே சென்றுள்ளார். அதை கண்ட  ஆட்டோ ஓட்டுநர் சிறுமியை வலுக்கட்டாயமாக  கடத்தி சென்றுள்ளார். பின்னர், வெள்ளவேடு என்ற பகுதியில் உள்ள வாட்டர் கம்பெனி பின்புறம், முட்புதரில் வைத்து, சிறுமியை அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து, அவரிடம் இருந்த எப்படியோ தப்பித்து வந்த மாணவியை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வெள்ளவேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், கதறியபடி நடந்தவற்றை போலீசாரிடம் கூறியுள்ளார். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்  பட்டாபிராம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராமகிருஷ்ணன் (38) என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்