சிறைக்கெல்லாம் போக முடியாது... கோவை நீதிமன்றத்தில் இருந்து கத்தியோட தப்பியோடிய கைதி… விரட்டிப்பிடித்த போலீசார்

By Ajmal Khan  |  First Published Aug 9, 2023, 11:17 AM IST

கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நபரை போலீசார் கைது செய்ய முயன்றதால், திடீரென கையில் கத்தியை வைத்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டதால்  நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 


கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான நிலையில் தற்போது  பிரியா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். இந்தநிலையில் இவர் மீது கடந்த 2021 ம் ஆண்டு காஞ்சனா என்பவர் கொடுத்த புகாரின் பேரில்  பஷீர் மீது பெண்கள் மீதான வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராக பல முறை நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து பஷீருக்கு  நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

தப்பி ஓடிய கைதி- நீதிமன்றத்தில் பரபரப்பு

இதன் காரணமாக நேற்று தனது மனைவி பிரியாவுடன் நீதிமன்றம் வந்தார். அப்போது நீதிமன்றத்தில் அவரை கைது செய்ய போலீசார் தயாராக இருந்ததால், ஆவேசமடைந்த பஷீர் சிறைக்கு போகமாட்டேன் என கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் மனைவி பிரியாவின் கைப்பையில் இருந்த சிறிய கத்தியை தூக்கிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டார். மேலும் போக்குவரத்து நெரிசல் சாலையில் தப்பி ஓடிய அவரை போலீசார் விரட்டி பிடித்து நீதிமன்றம் அழைத்து வந்தனர். இதனையடுத்து காவல் துறையினர் அவரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து செல்வபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.நீதிமன்ற வளாகத்தில் கத்தியுடன் பஷீர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்

தவறுதலாக ஊக்கை விழுங்கிய 2- வயது குழந்தை.. சாதித்து காட்டிய திருச்சி அரசு மருத்துவமனை

click me!