கல்குவாரிக்கு எதிராக புகார்...! லாரியை ஏற்றி கொலை... துடி துடித்து பலியான விவசாயி

By Ajmal Khan  |  First Published Sep 11, 2022, 12:36 PM IST

கல் குவாரிக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நபரை அதே குல் குவாரிக்கு சொந்தமான லோடு லாரியை மோதி கொலை செய்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


கல்குவாரி மீது புகார்- கொலை

கரூர் மாவட்டம் குப்பம் கிராமத்தை அடுத்த காளிபாளையம் வெட்டுக்காட்டு தோட்டம் கிராமத்தை சார்ந்தவர் ஜெகநாதன். வயது 52. இவர் இன்று மாலையில் காருடையாம்பாளையத்தில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். சண்முகம் என்பவரது தோட்டத்திற்கு அருகில் சாலையில் சென்று கொண்டுருந்த போது  தனியார் கிரசருக்கு சொந்தமான மினி லாரி மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த க.பரமத்தி காவல் நிலைய போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது விபத்து அல்ல முன் விரோதம் காரணமாக கொலை நடந்து இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

Tap to resize

Latest Videos

இபிஎஸ் தலைமையை ஏற்றுக்கொண்டால் அதிமுகவில் சசிகலா இணையலாம்..? மூத்த நிர்வாகியின் திடீர் அறிவிப்பால் பரபரப்பு

கொலை வழக்கு பதிவு

இந்நிலையில் கல்குவாரி செயல்படும் கால முடிந்தும் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக கூறி அதே கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் கனிமவளத்துறையினரிடம் புகார் கொடுத்ததின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கனிமவளத்துறை அந்த கல் குவாரியை இழுத்து மூடியுள்ளனர். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில், நேற்று ஜெகநாதன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது  அந்த கல்குவாரியின் பொலிரோ வேன் ஜெகநாதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில்  சம்பவ இடத்தில் ஜெகநாதன் உயிர் இழந்தார். இந்நிலையில் க.பரமத்தி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொலை வழக்கு பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் ஓட்டுநர் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

சொல்லுவது ஒன்று.. செய்வது ஒன்று...! இது தான் திராவிட மாடலா..? ஸ்டாலினை சீண்டும் ஓபிஎஸ்

 

click me!