மனைவி நம்பரை நண்பர்களுக்கு கொடுத்த கணவன்.. ஆபாசமாக பேசிய நண்பர்கள் - அதிர்ச்சியில் மனைவி

Published : Sep 10, 2022, 05:05 PM IST
மனைவி நம்பரை நண்பர்களுக்கு கொடுத்த கணவன்.. ஆபாசமாக பேசிய நண்பர்கள் - அதிர்ச்சியில் மனைவி

சுருக்கம்

கணவன் மனைவிக்கிடையே பொதுவாக அவ்வப்போது சண்டை ஏற்படுவது இயல்பான சம்பவம் தான்.

உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கும் அந்த பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண் ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. திருமணம் முடிந்த பின்பும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் கணவன் ஆகாஷ். இதனால்,  கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  

மேலும் செய்திகளுக்கு..500 மில்லியன் டாலர் சொத்து.. பாஸ்போர்ட் இல்லாமலே வெளிநாடு போகலாம் - மன்னர் சார்லசுக்கு இவ்வளவு வசதிகளா ?

இந்நிலையில் ஒருமுறை கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை ஆகாஷ் வெளியே அனுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகாஷ் குடும்பம் மீது புகார் தெரிவித்தனர். இதனால் கோபமான ஆகாஷ் தன் மீதும் தங்கள் குடும்பம் மீதும் கொடுக்கப்பட்ட புகாரை வாபஸ் வாங்கும்படி மனைவியை மிரட்டியுள்ளார். நான் அதற்கு உடன்பட மாட்டேன் என்று அந்த இளம்பெண் விடாப்பிடியாக இருக்க, சண்டை நடைபெற்றுள்ளது. 

இதனால் கடும் கோபமடைந்த ஆகாஷ் தனது மனைவியை பழிவாங்க வேண்டும் என்று ஒரு திட்டத்தை தீட்டினான். அதன்படி, நண்பர்களுக்கு தனது மனைவியின் வாட்சப் எண்ணை அனுப்பி ஆபாசமாக பேசுமாறு கொடுத்துள்ளார். அவர்களும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு என அவரது எண்ணை பரிமாறி ஆபாசமாக பேசியும் புகைப்படம் அனுப்பியும் ஆகாஷ் மனைவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..கோஹினூர் வைரம் இந்தியா திரும்ப வேண்டும்.. ட்விட்டரில் மன்னர் குடும்பத்தை விளாசும் நெட்டிசன்கள் !

இதனால் அவர் காவல்நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கணவனே மனைவியின் மொபைல் எண்ணை நண்பர்களுக்கு பகிர்ந்து ஆபாசமாக பேசுமாறு கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கைவிட மறுத்த கணவன் - நடுராத்திரியில் மனைவி செய்த சம்பவம்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை