மண் கொட்டியதில் தகராறு.. சண்டை போட்டவரின் காதை கடித்து துப்பிய நபர்.. வைரல் சம்பவம் !!

Published : Apr 13, 2022, 10:41 AM IST
மண் கொட்டியதில் தகராறு.. சண்டை போட்டவரின் காதை கடித்து துப்பிய நபர்.. வைரல் சம்பவம் !!

சுருக்கம்

இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்த நிலையில், ஆனந்த குமார் மண் கொட்டி வைத்தது இருவருக்கும் இடையே தகராறை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக காந்தி ராஜனுக்கும், ஆனந்தகுமாருக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியுள்ளது.

மண் கொட்டியதில் தகராறு :

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், பூனை கவுண்டன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஆனந்த குமார். இவருக்கு வயது 28. இவர் தனது வீட்டின் முன்பு மண் கொட்டி வைத்துள்ளார். ஆனந்த குமாரின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் காந்தி ராஜன். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்த நிலையில், ஆனந்த குமார் மண் கொட்டி வைத்தது இருவருக்கும் இடையே தகராறை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. 

காதை கடித்து துப்பிய நபர் :

இதன் காரணமாக காந்தி ராஜனுக்கும், ஆனந்தகுமாருக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஒருகட்டத்தில் காந்திராஜன் ஆனந்தகுமாரின் வலது பக்க காதை துண்டாகக் கடித்து துப்பியுள்ளார். இதனையடுத்து வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த ஆனந்தகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  வீட்டின் முன்பு மண் கொட்டி வைத்ததால் ஏற்பட்ட தகராறில் ஒருவரின் காதை மற்றொருவர் கடித்துத் துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து எரியோடு காவல்துறையினர் காந்திராஜன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது கவுண்டமணி - செந்திலின் பழைய காமெடியில் வருவது போல இருக்கிறது. அதில் கவுண்டமணிக்கு பணம் தராதவரின் காதை செந்தில் கடிப்பது போல் காட்சி இருக்கும். அந்த சம்பவத்தை நியாபகப்படுத்துவது போல இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.    

இதையும் படிங்க : இதுதான் பேட்ட பாயுற நேரம்.. கொங்கு மண்டலத்தில் ‘கெத்து’ காட்டும் சசிகலா.. அதிமுக தலைமை அதிர்ச்சி !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!