திருச்சியில் பாலடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 40). பெயிண்டர். இவருடைய மனைவி சபுராபீவி என்கிற நிஷா (35). இருவேறு மதத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சதீஷ்குமார் மீது காவல் நிலையத்தில் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் இவர் தனது மனைவி சபுராபீவியை பொன்மலை பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே ரெயில்வேக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நேற்று இரவு அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் சபுராபீவியை கீழே தள்ளி அவரது கழுத்தை சேலையால் இறுக்கியுள்ளார்.
undefined
திமுகவினரின் செருப்பைக்கூட ஒருவராலும் தொட முடியாது - ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்
பின்னர் அவருடைய தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் சபுரா பீவி வீட்டில் இல்லாதது குறித்து அவரது உறவினர்கள் பொன்மலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அந்த பாழடைந்த கட்டிடத்திற்கு சென்று பாாத்துள்ளனர். அப்போது அங்கு சபுராபீவி கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவன்; கட்டையால் அடித்து கொன்ற மனைவி
இதையடுத்து காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொன்மலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் நடத்தையில் சந்தேகப்பட்டு சதீஷ்குமார் மனைவியை பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்று கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய சதீஷ்குமாரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.